மோட்சம் உலகத்தை சந்தித்தபோதுமாதிரி

மோட்சம் உலகத்தை சந்தித்தபோது

5 ல் 4 நாள்

தெய்வீக எதிர்பார்ப்புகள் மோட்சத்தை உலகத்துக்குக் கொண்டுவருகிறது

தன் பிறப்பால் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றப் போகும் ஒருவரது பிறப்புக்காக உங்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அது தான் சிமியோனும் அன்னாளும் வாழ்ந்த வாழ்க்கையாகும். சிமியோன் என்னும் வயதானவர், தீர்க்கதரிசிகளால் வாக்குக் கொடுக்கப்பட்ட இஸ்ரவேல் நாட்டைக் காப்பாற்றி, சீரமைக்க வரப்போகும்  மீட்பரைக் காண காத்திருந்தார். விதவையாக தேவாலயத்தில் ஜெபித்துக் கொண்டும் ஆராதனை செய்து கொண்டும் இருந்தார் அன்னாள் என்னும் 84 வயது தீர்க்கதரிசி. இயேசுவைக் கண்டதும் அவர் இஸ்ரவேலின் மீட்புக்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் தீர்க்கதரிசனம் சொன்னார். சிமியோனுக்கும் அன்னாளுக்கும் இருந்த ஒற்றுமை என்னவென்றால் அவர்களது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு தான். இது ஒரு சாதாரணமான எதிர்பார்ப்பு அல்ல, தெய்வீக எதிர்பார்ப்பு. அவர்கள் நடுவில் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. தங்கள் விசுவாசத்தின் வல்லமையை இழந்துவிடவும் இல்லை. ஆகவே தான் இது ஒரு தெய்வீக எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அவர்கள் காத்திருந்த ஆண்டுகள் முழுவதும் பரிசுத்த ஆவியானவர் தொடர்ச்சியாக அவர்களுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டிருந்தார்.  அந்த நாளில் எட்டு நாள் குழந்தையான இயேசுவை ஆலயத்துக்குக் கொண்டுவந்தார்கள்.  பரிசுத்த ஆவியானவர் அவர்களை நேரடியாக இயேசுவிடம் வழிநடத்தினார். சிமியோனுக்கும் அன்னாளுக்கும் இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்த ஒன்றைக் காண்பது எத்தனை அருமையான தருணமாக இருந்திருக்கும்!


நாம் அனைவரும் ஏதாவது ஒன்றுக்காக காத்துக் கொண்டு தான் இருப்போம். அது வாக்களிக்கப்பட்ட ஒரு குழந்தையாக இருக்கலாம், எதிர்கால வாழ்க்கைத் துணையாக இருக்கலாம். உடலளவி லான சுகமாகுதலாக இருக்கலாம். அல்லது பணத்தேவைகளில் ஒரு அற்புதமாக இருக்கலாம். எப்படிப்பட்ட காத்திருக்குதலாக இருந்தாலும், காத்திருத்தல் என்பது எளிதானது அல்ல. காத்திருத்தல் இனிமையானதல்ல. அது சோர்பு தருவது.

 

பரிசுத்த ஆவியானவரை நமது காத்திருக்குதலுக்குள் அனுமதிக்கும்போது, சில சூழல்கள் நகருகின்றன. அவை நிறைவேறும் பாரம் இனி நம்முடையது அல்ல. காத்திருத்தலின் அழுத்தமானது இனிமையாகிறது. கர்த்தர் ஆயத்தமாக்கும் செயல்களை ஒழுங்குபடுத்துவதை நாம் காண்கிறோம். அவரது வழிநடத்துதலை உணரும்போதே அவர் நமக்குத் தேவையானவைகளைக் கொடுப்பதைக் காண்போம். அவர் நமக்கென்று குறித்து வைத்திருக்கும் காலமும் அவரது அற்புதமான வாக்குத்தத்தங்களும் ஒரு போதும் நம்மை ஏமாற்றமடையச் செய்யாது என்பதை அறிந்து கொள்வோம்.


காத்திருக்க நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்களா?

தெய்வீகக் காத்திருப்பைத் துவங்குவதற்காகப் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குள் வரவேற்பீர்களா?


வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

மோட்சம் உலகத்தை சந்தித்தபோது

கிறிஸ்மஸ் என்பது நம்மைப் பற்றியும் இயேசு இந்த உலகத்துக்கு வந்தது நம் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பதையும் உற்றுப் பார்க்கும் மாபெரும் காலமாகும். மோட்சம் உலகத்தை வெற்றி கொண்டது, நித்தியகாலத்துக்கும் அதை மாற்றிவிட்டது. நமது வாழ்க்கை கடினமானதாக, சிக்கல் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் இயேசு உள்ளே இருந்தால் அது நோக்கம் அற்றதாக இருக்காது. மோட்சம் உங்கள் வாழ்க்கையைப் பிடித்துக் கொள்ள அனுமதிப்பீர்களா? கர்த்தரின் பிரசன்னமும் அவரது நோக்கமும் பற்றிய மாபெரும் புரிதலுடன் வாழத்துவங்குவீர்களா?

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan