மோட்சம் உலகத்தை சந்தித்தபோதுமாதிரி
கீழ்ப்படிதல் உலகத்தில் மோட்சத்தைக் கொண்டுவருகிறது
இயேசு இந்த உலகத்தில் வருவதற்கு யோசேப்பும் மரியாளும் முக்கிய காரணங்களாக இருந்தார்கள். மரியாள் தன் கருப்பையில் இயேசு தங்குவதற்கு ஒரு தற்காலிக வீட்டைக் கொடுத்திருந்தார். அந்த சிறு குடும்பத்துக்கு உறுதியையும் பாதுகாப்பையும் யோசேப்பு கொடுத்தார். இயேசுவின் பெற்றோரை இணைத்திருந்த பொதுவான தொடர்பு என்பது கர்த்தருக்கு அவர்களது நிபந்தனையற்ற கீழ்ப்படிதல் தான். அவர்களுக்குக் காட்சியளித்த தேவதூதனிடம் கேள்விகேட்கவில்லை. சந்தேகத்துடன் அவர்கள் செயல்படவில்லை. தங்கள் பணியை ஏற்றுக் கொண்டவர்களாக, எளிமையான கீழ்ப்படிதலால் அதை நடத்திக் காட்டினார்கள். சூழ்நிலை நன்றாக இல்லை. திருமணமாகாமலேயே கருவான தாயைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் நிழலிடுவதால் அவள் தாயாவாள் என்று சொல்லப்படுகிறது. நிச்சயம் செய்யப்பட்ட ஒரு மனிதன் கர்ப்பவதியான ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவும், உடலின்படி தன் குழந்தையல்லாத ஒரு குழந்தையைப் பாதுக்காக்க ஊர் ஊராகத் தன் குடும்பத்தை அழைத்துச் செல்லவும் கனவில் வழிகாட்டப்படுகிறார். தடைகள் நிறைந்த வாழ்க்கையின் நடுவே அவர்கள் மீண்டும் மீண்டும் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதையே தேர்ந்தெடுத்தார்கள்.
நம் வாழ்வில் கர்த்தர் சில செயல்களைச் செய்ய சொல்லுவார். அவரது பெயருக்கு மகிமை வருவதற்காக, நம்மைப் பிறருக்கு ஆசீர்வாதமாக வைக்க, சில இடங்களுக்குப் போகச் சொல்வார். சில சொற்களைச் சொல்ல வைப்பார், குறிப்பிட்ட வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் சொல்வார். அவரது குரலைக் கேட்க, வழிகாட்டுதலைப் புரிந்துகொள்ள, அவரது பிரசன்னத்தை அறிந்துகொள்ள நம் மனது பழக்கப்படுத்தப்படவில்லை என்றால் நாம் வழி தவறி நோக்கத்தை விட்டுப் போய்விட வாய்ப்புக்கள் உண்டு. கிறிஸ்துவைப் பின்பற்றத் தீர்மானிக்கும் போது கீழ்ப்படிதல் என்ற குணத்தை நம் இதயத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவருக்குக் கீழ்ப்படிவது தான் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். நமது கீழ்ப்படிதல் உடனடியானதாக முழுமையானதாக இருக்கிறதா என்று நம் இதயங்களை அவர் சோதித்துப் பார்க்கிறார்.
கர்த்தருக்கு நீங்கள் எந்த அளவுக்குக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருக்கிறீர்கள்?
கர்த்தர் உங்களுடன் பேசுவதைக் கேட்பது உங்களுக்குக் கடினமானதாக இருந்து கொண்டிருக்கிறதா?
அவர் சத்தம் கேட்கும் அளவுக்கு உங்களை நீங்கள் அமைதிப்படுத்துவீர்களா? அவர் சத்தம் கேட்டுக் கீழ்ப்படிய ஆயத்தமாக இருப்பீர்களா?
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்மஸ் என்பது நம்மைப் பற்றியும் இயேசு இந்த உலகத்துக்கு வந்தது நம் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பதையும் உற்றுப் பார்க்கும் மாபெரும் காலமாகும். மோட்சம் உலகத்தை வெற்றி கொண்டது, நித்தியகாலத்துக்கும் அதை மாற்றிவிட்டது. நமது வாழ்க்கை கடினமானதாக, சிக்கல் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் இயேசு உள்ளே இருந்தால் அது நோக்கம் அற்றதாக இருக்காது. மோட்சம் உங்கள் வாழ்க்கையைப் பிடித்துக் கொள்ள அனுமதிப்பீர்களா? கர்த்தரின் பிரசன்னமும் அவரது நோக்கமும் பற்றிய மாபெரும் புரிதலுடன் வாழத்துவங்குவீர்களா?
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan