நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி
சொப்பனங்களும் தரிசனங்களும்
தேவனுடைய சத்தத்தை எப்படி பிரித்தறிவது? முதலாவதும் முக்கியமானதும்,அவர் தனது வார்த்தையின் மூலமாய் பேசுகிறார், பரிசுத்த வேதாகமம். வேறு முறைப்படி பேசினாலும் அது அவருடைய வார்த்தையோடு ஒத்துப் போகிறதாய் இருக்கும்.
நம்மோடு ஜெபத்தில் பேசுகிறார்.
மற்ற விசுவாசிகள் மூலமாக, நமது தலைவர்கள் மூலமாக, தீர்க்கதரிசிகள் மூலமாக நம்மோடு பேசுகிறார்.
அவர் சொப்பனங்கள் மூலமாகவும் தரிசனங்களின் மூலமாகவும் பேசுகிறார்.
யோவேல் 2:28-29ல், கர்த்தருடைய நாளைப் பற்றிய தீர்க்கதரிசனங்களுக்கு மத்தியில், கடைசி நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதை குறித்து சத்திய ஆவியானவர் எழுதியுள்ளார்.அங்கே வசனம் சொல்லுகிறது “குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள், மூப்பர் சொப்பனங்களையும் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.”
கடைசி நாட்கள் எப்பொழுது என்று நமக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்த தீர்க்கதரிசனத்தை அறிந்து, சொப்பனங்களையும் தரிசனங்களையும் எதிர்நோக்கி இருக்க வேண்டும் – சொப்பனங்களும் தரிசனங்களும் நமக்கு வரும்போது அதை உற்று கவனிக்க வேண்டும்.
எண்ணாகமம் 12:6ல், தேவன் தான் அனுப்பிய தீர்க்கதரிசியின் மூலமாக சொப்பனங்கள் மற்றும் தரிசனங்களின் உண்மையைத் தன்மையை உறுதிப்படுத்துகிறார்.
நாம் சொப்பனங்களுமி தரிசனங்களும் பார்க்கும்போது, நாம் செய்ய வேண்டிய முதலாவது காரியம் தேவனிடம் கேட்க வேண்டும், "ஆண்டவரே, இது உம்மிடமிருந்து தான் வருகிறதா?" என்று. அவருடைய வார்த்தையின் மூலமாகவும் அவருடைய பிரசன்னத்தின் மூலமாகவும் இது தேவனிடம் இருந்து தான் வந்தது என்று உறுதிப்பட்ட பிற்பாடு அடுத்து, "இதை வைத்து நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்க வேண்டும். அவர் நமக்கு இந்த சொப்பனத்தையும் தரிசனத்தையும் தந்தது ஒரு காரணத்திற்காக. எனவே, அந்த காரணத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
நான் விசுவாசிக்கிறேன், நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேவன் கடைசி நாட்களில் நம்மோடு சொப்பனங்கள், தரிசனங்கள் மூலமாய்மாய் பேசுவதாக உறுதியளித்திருக்கிறார். எனவே அவர் நம்மோடு இவ்விதமாக பேசுவார் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். அப்படி கர்த்தர் பேசும்போது நாம் கவனமாய் கவனிக்க வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More