நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி
தேவன் பார்ப்பதை பார்த்தல்
பெரும்பாலும், நாம் ஒன்றைப் பார்க்கவில்லை எனில் அது நடக்கவில்லை என்று நினைக்கிறோம். ஆனால் உண்மை அது அல்ல. இப்படி சிந்தித்துப் பாருங்களேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கு வெளியே வேறு ஒரு வேலை நடக்கிறது என்றால் உங்களால் அதை பார்க்க முடியாது, ஆனால் அதற்காக அங்கே வேலை நடக்கவில்லை என்று அர்த்தமாகாது. உங்களால் ஊரின் அந்த பக்கம் உள்ள மளிகைக் கடையைப் பார்க்க முடியவில்லை என்பதற்காக அங்கே யாரும் எதுவும் வாங்கவில்லை என்று அர்த்தமா? நிச்சயமாக இல்லை. நம்மில் பலர் இப்படித்தான் வாழ்கிறோம். நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், ஆவியானவரால் நிரப்பப்பட்டு இருக்கிறோம், தேவனுக்கும், சபைக்கும் உண்மையாக இருக்கிறோம். ஆனால் பிசாசு இப்பூமியில் பரலோக ராஜ்ஜியமும் பிசாசின் ராஜ்ஜியமும் கிரியை செய்கிறது என்பதை மறக்கிறோம்.
நம்முடைய அறிவு கண்கள் ஒளி பெற வேண்டும், அப்பொழுது கர்த்தர் நம்மை அழைத்த அழைப்பின் நம்பிக்கையை அறிந்து கொள்ளுவோம். அப்படி அறிந்து கொள்ளும்போது தேவனுடைய அழைப்பை பற்றி சாதாரணமாக எண்ணாமல் இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளவும், நம்முடைய அழைப்பை கொண்டு அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
எபேசியர் 1:17-21, இப்படிப்பட்ட ஒளி பெறுதலை குறித்து பேசுகிறது. “அவர் நம்மை அழைத்த அழைப்பின் நம்பிக்கையை அறிந்து கொள்ளும்படி நம்முடைய மனக்கண்கள் பிரகாசம் அடைய வேண்டும்.” என பவுல் தேவனிடம் வேண்டிக் கொள்கிறார்
பின்னர் எபேசியர் 6:12-17ல், பவுல் சர்வாயுதவர்க்கத்தைக் குறித்துப் பேசுகிறார். இந்த சர்வாயுதவர்க்கம் – ஒவ்வொரு பகுதியும் வித்தியாசமானது – ஆனால் இவை அனைத்துமே தேவனையும், அவருடைய உண்மையையும் அவருடைய வார்த்தையையும், அவர் இரட்சிப்பையும் நன்றாக புரிந்து கொள்வதிலிருந்து துளிர் விடுகிறது. இயேசுவின் நீதியை தரித்துக் கொள்வது – நமது மார்க்கச்சை. இந்த ஆயுதம் சத்துருவின் எல்லா தாக்குதலின் அம்புகளையும் “அவித்துப் போடும்."
நம்மை பாதுகாத்துக்கும் நிலையிலே எப்போதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை! சாத்தானை தாக்கும் ஆயுதமாக நமக்கு ஒரு வாள் உண்டு, பவுல் அதனை “ஆவியின் பட்டயம்” என்று அழைக்கிறார். இது பிசாசு நம்மிடமிருந்து பறித்துக் கொண்டவைகள் நமக்கு திரும்ப பெற்றுத் தரும்.
நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த நிரம்பி வழிதல் மேல்மட்டத்தை தொட மாத்திரமே செய்திருக்கிறது. உங்களுடைய அறிவுக் கண்கள் பிரகாசமடையும் போது, நீங்கள் இதற்கு முன் அனுபவித்திராத ஊற்றப்படுதலை ஆவியானவரிடமிருந்து பெறுவீர்கள். நேரம், புவியியல் அல்லது மனிதத் திறனுக்குக் கட்டுப்படாத ஒரு சாம்ராஜ்யத்தைத் திறக்க தேவன் வல்லவர், அப்படி செய்யவே விரும்புகிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More