வெற்றிகரமான உறவுகள்மாதிரி

வெற்றிகரமான உறவுகள்

7 ல் 4 நாள்

உங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் இருக்கின்றவாறே ஆண்டவர் என்னை நேசிக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு, என்னை நானே ஏற்றுக்கொள்ள நான் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமானதும் முக்கியமானதும் ஆகும். இன்னும் துணிகரமாக சொன்னால், ஒருவர் தம்மை தாமே நேசிப்பது மிகவும் முக்கியம்! அதாவது, "நான் மற்ற எல்லாரையும் விட சிறந்தவர்" என்று சொல்வது அல்ல. அப்படி கூறுவது தற்பெருமை. மாறாக, "நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்..." என்று கூறுவது. (வேதாகமம், சங்கீதம் 139:14). இதுதான் நன்றியுணர்வு, அதுமட்டுமின்றி இன்னும் மேலானது... ஏனென்றால் இது வேதாகமத்தில் உள்ளது!

உங்கள் மீது பேசப்பட்ட புண்படுத்தும் வார்த்தைகளால் அல்லது முற்காலத்தில் ஏற்பட்ட வேதனைகளால் இந்த வார்த்தைகளை அறிவிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்… ஆனால், இதை தெரிந்துகொள்ளுங்கள்: உங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை ஆண்டவர் சீர்படுத்தி குணமாக்க விரும்புகிறார். அவருடைய அன்பு சகல காயங்களையும் குணமாக்கும்: கடந்த கால காயம், உள்மன காயம், உடலில் ஏற்பட்ட காயம், இதில் எதுவானாலும் குணமாகும்.

இதனால்தான் இன்று நான் அறிக்கையிடுகிறேன்... உங்களைப் பற்றிய உங்கள் பார்வை மாறப்போகிறது! ஆண்டவர் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதோடு அது உடன்படும். பெலத்தோடு இதை அறிக்கையிடுங்கள்: "நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்."

அன்பரே, உங்களைப் பாராட்டுகிறேன், உங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்!

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

வெற்றிகரமான உறவுகள்

அவரோடு உறவாடுவதற்காகவே ஆண்டவர் மனிதனை படைத்தார். நாம் உறவுமுறைக்குள் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். நாம் ஆண்டவரிடமும், நம்மோடும் மற்றவர்களோடும் நன்மையான, உறுதியான உறவுகளில் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் திட்டம். அதனால்தான் ஒவ்வொரு உறவிலும் இடைவிடாத முயற்சியும் கவனமும் தேவை. உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றியும் அதில் விரிசல்கள் வராமல் காத்துக்கொள்வது எப்படி என்பதை பற்றியும் ஆண்டவர் அவர் வார்த்தையின் வழியாக என்னோடு பேசியதை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=successfulrelationships