வெற்றிகரமான உறவுகள்மாதிரி

வெற்றிகரமான உறவுகள்

7 ல் 5 நாள்

நம்பிக்கை உடையும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒரு உறவு முறிந்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை பற்றி இன்றைக்கு பார்ப்போம். வாக்குவாதங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்றன, ஆனால், இரு தரப்பினரும் ஒத்துப்போனால் திரும்பவும் பரஸ்பரம் உண்டாக வாய்ப்புள்ளது. இவ்வாறு நடக்க வேண்டுமென்றால், சிதறிப்போயிருக்கும் அல்லது அழிந்துபோயிருக்கும் நம்பிக்கையை மீண்டும் கட்டுவிப்பது முற்றிலும் அவசியமாகும். இதை அடைவதற்கு, செய்த தவறுகளை உணர்ந்து, நமக்கு எதிரில் இருப்பவரை மன்னிப்பதும் மிகவும் முக்கியம்.

மன்னிப்பு என்பது, உண்மையிலேயே, சிதறிய நம்பிக்கையை மீண்டும் கட்டுவதற்கு அவசியமானது. அது இல்லாமல், முறிந்துபோன உறவை மீட்டெடுக்க முடியாது. நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால்….

  • உங்கள் பிரச்சினையை ஆண்டவர் முன்வையுங்கள். உங்கள் காயத்தை அவரிடம் சொல்லுங்கள் அல்லது எழுதி வையுங்கள். முற்றிலும் வெளிப்படையாக இருங்கள், மன்னிக்கும் இதயத்தை உங்களுக்கு தந்து உதவுமாறு அவரிடம் கேளுங்கள்.
  • பின்னர், அவருடைய முன்னிலையில், மன்னிக்க முடிவெடுங்கள், ஏனென்றால், இயேசு நமக்கு ஜெபிக்கக் கற்பித்தபடி, "எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்." (வேதாகமம், மத்தேயு 6:12)
  • இறுதியாக, நீங்கள் மன்னித்துவிட்டீர்கள் என்று கர்த்தருக்கு முன்பாக அறிக்கையிடுங்கள். நீங்கள் அதை ஒரு துண்டு காகிதத்தில் எழுதியிருந்தால், அதை கிழித்து அல்லது எரித்து போடுங்கள் (கண்டிப்பாக வீட்டிற்கு எந்த சேதமும் ஏற்படாமல்!).

நீங்கள் மன்னிக்கும் போது, ​​அந்த இடத்திலிருந்து, நீங்கள் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலையாகிறீர்கள், உங்களுடைய வலியும் ​​குறைய ஆரம்பித்து பின்பு முற்றிலும் நீங்கிவிடும்.

சில நேரங்களில் நாம் இவ்வாறு சொல்ல ஆசைப்படுவது உண்டு, "அந்த நபர் மன்னிப்பு கேட்க என்னிடம் வரும் வரை நான் காத்திருக்கப் போகிறேன், பின்னர் நான் மன்னிப்பேன்!". நாம் நினைப்பதற்கு மாறாக, இந்த சூழ்நிலைகளில், அந்த நபர் வராமலே போனால், நாம் சிறையில் பின்தங்கி வேதனை தொடரும் நிலைமை ஏற்படுகிறது. நாம்எதிர்பார்ப்பிற்கு மாறாக, இந்த சூழ்நிலைகளில், அந்த நபர் வராமலே போனால், நாம் கட்டுக்குள் பின்தங்கி தொடர்ந்து வேதனையை அனுபவிக்கின்றோம்.

மன்னிப்புடன் கூடிய சுதந்திரத்தை நீங்களே உங்களுக்கு மறுக்க வேண்டாம், அன்பரே. ஆண்டவர் உங்களுக்கென்று ஆயத்தப்படுத்திய வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்கவும், சுதந்திரமாக இருக்கவுமே நீங்கள் பிறந்தீர்கள். மன்னிக்க மறுக்கும் தன்மை இனி உங்கள் வாழ்க்கையையும், உங்கள் சந்தோஷத்தையும் திருடாமல் இருக்கட்டும்... இன்றைக்கே மன்னியுங்கள்! உண்மையான மன்னிப்பை நீங்கள் வெளிப்படுத்த ஆண்டவர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் அவரிடம் கேட்டால் நிச்சயமாக செய்வார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

வெற்றிகரமான உறவுகள்

அவரோடு உறவாடுவதற்காகவே ஆண்டவர் மனிதனை படைத்தார். நாம் உறவுமுறைக்குள் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். நாம் ஆண்டவரிடமும், நம்மோடும் மற்றவர்களோடும் நன்மையான, உறுதியான உறவுகளில் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் திட்டம். அதனால்தான் ஒவ்வொரு உறவிலும் இடைவிடாத முயற்சியும் கவனமும் தேவை. உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றியும் அதில் விரிசல்கள் வராமல் காத்துக்கொள்வது எப்படி என்பதை பற்றியும் ஆண்டவர் அவர் வார்த்தையின் வழியாக என்னோடு பேசியதை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=successfulrelationships