வெற்றிகரமான உறவுகள்மாதிரி
அவமதிப்பு உங்கள் கதவைத் தட்டும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த பூமியில் நாம் இருக்கும் வரை, நம் விருப்பத்திற்கு மாறாக, மற்றவர்கள் நம்மை புண்படுத்துவது அல்லது நாம் மற்றவரை புண்படுத்தும் அபாயம் எப்போதுமே உண்டென்று நான் அறிந்திருப்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் வெறும் மனிதர்கள் என்பதால், தவறு செய்யக்கூடியவர்களாய் இருக்கிறோம்.
எப்படியானாலும், மற்றவர்களின் புண்படுத்தும் சொற்களோ, தீங்கிழைக்கும் செயல்களோ உங்கள் வாழ்க்கையில் கசப்பான விஷமாக வளர விடாதீர்கள் . இதை விட நீங்கள் மிகவும் மதிப்புடையவர்கள்!
வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது, அவமதிப்பை புறக்கணிக்கவோ அல்லது அலட்சியம் செய்யவோ அல்ல, மாறாக மன்னிப்பின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு, மனக்கசப்பையும் பழிவாங்கும் எண்ணத்தையும் விட்டுவிடுவதற்கு.
நீதிமொழிகள் 10:12 சொல்வது என்னவென்றால் : "பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்."
இதை வேறு விதமாக சொன்னால், யாராவது உங்களை காயப்படுத்தும்போது, அவருடைய தவறுகளை மூடுவதுதான் நீங்கள் செய்யவேண்டியது. அதாவது ஒரு பொருளை துணியால் மூடுவதற்கு நிகரானது, மூடுவதினால் இனி அது கண்ணுக்கு தெரியாது. இந்த ஒப்பிடுதலின் தொடர்ச்சியாக, அன்பின் "அங்கியால்” உங்களை புண்படுத்தியவரை நீங்கள் மூடினால், அவருடைய தவறுகள் உங்கள் பார்வையில் இருந்து மறைந்துவிடும். பின்பு, அந்த நபரை பற்றிய உங்களுடைய அபிப்ராயத்தை புதுப்பித்து மாற்றும்படி ஆண்டவரிடம் கேளுங்கள்.
அன்பு எல்லா பாவங்களையும் முற்றிலுமாக மூடும். இந்த அன்பின் செயலை நீங்கள் சாத்தியமாக்கி நிறைவேற்றுவதற்கு ஆண்டவர் இன்று உங்களுக்கு உதவிசெய்கிறார் என்று நான் விசுவசிக்கிறேன்.
"[அன்பு] சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்."(வேதாகமம், 1 கொரிந்தியர் 13:7)
அன்பரே, நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் என்பதை மறவாதீர்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அவரோடு உறவாடுவதற்காகவே ஆண்டவர் மனிதனை படைத்தார். நாம் உறவுமுறைக்குள் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். நாம் ஆண்டவரிடமும், நம்மோடும் மற்றவர்களோடும் நன்மையான, உறுதியான உறவுகளில் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் திட்டம். அதனால்தான் ஒவ்வொரு உறவிலும் இடைவிடாத முயற்சியும் கவனமும் தேவை. உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றியும் அதில் விரிசல்கள் வராமல் காத்துக்கொள்வது எப்படி என்பதை பற்றியும் ஆண்டவர் அவர் வார்த்தையின் வழியாக என்னோடு பேசியதை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=successfulrelationships