மனநலமும் உடல்நலமும் எப்படித் தொடர்புடையவை?மாதிரி

மனநலமும் உடல்நலமும் எப்படித் தொடர்புடையவை?

7 ல் 1 நாள்

இன்று உங்கள் ஆத்துமா எப்படி இருக்கிறது?

இன்று, நாம் மனதின் உணர்வு ரீதியிலான ஆரோக்கியம் பற்றிய பாடத் தொடரைத் தொடங்குகிறோம். இந்த வாரம், ஆண்டவர் உன் வாழ்க்கையின் மீது ஆழமாக அசைவாட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தருடைய அன்பினால் நான் உன்னை நேசிக்கிறேன்!

நீங்களும் நானும் மனிதர்கள்... இந்த பூமியில் இருக்கும் வரை, ஒவ்வொரு மனுஷனும் சந்திக்க வேண்டியதை நாம் தொடர்ந்து சந்திக்கிறோம்… சோர்வு! நிச்சயமாக, இந்த சோர்வு வெளிப்படையாக சரீரப்பிரகாரமாக இருக்கலாம், இருப்பினும், உண்மையில், அது மன ரீதியாகவும் அல்லது உணர்ச்சியாகவும் இருக்கக் கூடும்.

இந்த நேரத்தில் உங்கள் ஆத்துமா எவ்வாறு செயல்படுகிறது? எப்பொழுதும் அதே கஷ்டங்களை சந்திப்பதினாலும், அடிவானத்தில் ஜெயத்தைப் பார்க்கக்கூட முடியாமல் போராடுவதினாலும் நீங்கள் சோர்ந்துபோய் இருக்கிறீர்களா?

அப்படியானால், இந்த வாக்குத்தத்தங்கள் உங்களுக்காகத்தான்… “சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, (உங்களுக்கு தான்) சத்துவமில்லாதவனுக்கு அவர் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.” (ஏசாயா 40:29)

இது ஒரு நல்ல செய்தி அல்லவா!... ஆண்டவர் உன் சத்துவத்தைப் பெருகப்பண்ணுவதாக வாக்களிக்கிறார், அதில் உன் சரீரம் மற்றும் மன வலிமையும் அடங்கும்.

ஆம், அன்பரே, ஆண்டவரால் உனக்குள் நம்பிக்கையைப் பெருகச் செய்ய முடியும் மற்றும் சோர்ந்துபோயிருக்கும் உன் ஆத்துமாவுக்கு சத்துவத்தை மீண்டும் அளிக்க முடியும்.

இந்த வாசிப்பின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை பெறுவதற்கு இங்கே இலவசமாக பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

மனநலமும் உடல்நலமும் எப்படித் தொடர்புடையவை?

விஞ்ஞானபூர்வமாக மனநலத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருப்பது உண்மை என்பதை நாம் பலரும் அறிந்திருப்போம். இதைப்பற்றி நம் ஆண்டவர் வேதாகமத்தில் என்ன கூறியிருக்கிறார் என்பதை இந்த திட்டத்தில் ஆராய்ந்து பார்ப்போம். வாருங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=emotionalhealth