மனநலமும் உடல்நலமும் எப்படித் தொடர்புடையவை?மாதிரி

மனநலமும் உடல்நலமும் எப்படித் தொடர்புடையவை?

7 ல் 6 நாள்

பரிசுத்த ஆவியானவர் உங்களை மறுரூபப்படுத்த விரும்புகிறார்!

பரிசுத்த ஆவியானவர் உன்னை மறுரூபப்படுத்த விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? வேதாகமம் கூறுகிறது, "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." (ரோமர் 12: 2)

"மறுரூபம்" என்பதற்கான கிரேக்க வார்த்தை "மெட்டாமோர்போ" என்பதாகும், இது "மெட்டாமோர்போசிஸ்" (metamorphosis) என்ற ஆங்கில வார்த்தையின் மூலப் பதமாகும். பரிசுத்த ஆவியானவர் உன்னை "மறுரூபப்படுத்த" விரும்புகிறார்... வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உன்னை வல்லமையாய் உருமாற்ற விரும்புகிறார்!

நீ ஆண்டவருடைய வார்த்தையைத் தியானிக்கும்போது, ​​உதாரணமாக, "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற இந்த செய்தியின் வழியாக, நீ ஜெபம் செய்யும் போது, ​​நீ ஆண்டவரைப் புகழ்ந்து பாடும் போது, ​​பரிசுத்த ஆவியானவர் உன் வாழ்க்கையில் கிரியை செய்து உன்மீது அசைவாடத் துவங்குவார்.

உங்கள் மனதைப் புதுப்பிக்க நீங்கள் அவரை அனுமதித்தால், நீங்கள் அசாதாரணமான காரியங்களைப் பார்த்து அனுபவித்து ஆச்சரியப்படுவீர்கள்!

எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான லாஸ் வேகாஸில் உள்ள சர்வதேச தேவாலயத்தின் போதகர் பால் கோலெட் கூறுகிறார், "பரிசுத்த ஆவியானவர் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார், உங்கள் மனம் உங்கள் உணர்ச்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், உங்கள் உணர்ச்சிகள் நீங்கள் தேர்வு செய்யும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், நீங்கள் தேர்வு செய்யும் விதம் உங்கள் செயலில் தாக்கத்தை ஏற்படுத்தும், உங்கள் செயல்கள் உங்கள் விதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்." இவை அனைத்தும் தேவனுடைய ஆவியிலிருந்து தொடங்குகிறது! வேதாகமத்தில் கூட, ஆதியாகமம் 1 ஆம் அதிகாரத்தில் நாம் இதைப் பார்க்க முடியும்.

இன்று பரிசுத்த ஆவியானவர் உன் மனதைத் தொடும்படி அவரிடம் கேள். அவர் உன்னிடம் பேச வேண்டும் என்று கேள். அவர் உன்னை முழுவதுமாக மறுரூபப்படுத்துவார்… உன்னை முற்றிலும் "மாற்றமடையசெய்வார்"!

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

மனநலமும் உடல்நலமும் எப்படித் தொடர்புடையவை?

விஞ்ஞானபூர்வமாக மனநலத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருப்பது உண்மை என்பதை நாம் பலரும் அறிந்திருப்போம். இதைப்பற்றி நம் ஆண்டவர் வேதாகமத்தில் என்ன கூறியிருக்கிறார் என்பதை இந்த திட்டத்தில் ஆராய்ந்து பார்ப்போம். வாருங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=emotionalhealth

சம்பந்தப்பட்ட திட்டங்கள்