மனநலமும் உடல்நலமும் எப்படித் தொடர்புடையவை?மாதிரி

மனநலமும் உடல்நலமும் எப்படித் தொடர்புடையவை?

7 ல் 5 நாள்

உங்கள் மண்ணை கவனித்துக் கொள்ளுங்கள்...

நீங்கள் "பச்சை கட்டைவிரலுடன்” பிறந்தவராக உணர்கிறீர்களா? ஒரு செடி வளர்ந்து பூக்கும்படி ஆரோக்கியமாக பராமரிப்பது எப்போதும் எளிதானது அல்ல என உணர்கிறேன்... இது என் தனிப்பட்ட கருத்தாகும்.

ஒரு செடி வளர, குறிப்பாக சில முக்கியமான காரணிகள் தேவைப்படுகின்றன: நல்ல மண், செடிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த மண். இது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதில் சந்தேகமில்லை... எல்லா வகையான மண்ணும் ஒரு செடியைத் திறம்பட வளரச் செய்ய முடியாது!

மண்ணானது தனது வேலையை செய்வதற்கும், செடிக்கு ஒரு "தூண்டுதலாக" இருப்பதற்கும், மண்ணின் ஈரப்பதத்தைப் போதுமான அளவு பராமரிக்க நன்றாக நீரைத் தக்கவைக்க வேண்டும், அதே நேரத்தில் தாவரத்தின் வேர்களில் தேவையான அளவு காற்றோட்டத்தை அனுமதிக்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவைகள் சுவாசிக்க முடியும். மேலும், இது தேவையான சத்துக்கள் நிறைந்த மண்ணாகவும் இருக்க வேண்டும்.

உன்னுடைய மண், உன் இருதயமே! அதை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்!

  • ஆண்டவருடைய வார்த்தையைத் தொடர்ந்து நீர்ப்பாய்ச்சுவதன் மூலம் அதாவது, தியானிப்பதன் மூலம் உன் இருதயத்தின் மண்ணை ஈரப்பதமாக வைத்திரு, இது உன் உள்ளத்தைப் புத்துணர்ச்சியாக்குகிறது: மேலும், உன் வெளிப்புறத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது! ஏனெனில், “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்று வார்த்தை நமக்குச் சொல்கிறது. (மத்தேயு 12:34 ஐப் பார்க்கவும்)
  • உன் இருதயத்தின் மண்ணை அடிக்கடி ஜெபத்தால் பண்படுத்த வேண்டும். ஆண்டவரோடு கூடிய உண்மையான உரையாடல்கள் உன் அன்றாட வாழ்வில் புதிய காற்றை சுவாசிப்பதைப்போல இருக்கும். நீ ஜெபிக்கும்போது, ​​உன் வார்த்தைகள் நேர்மையாகவும், உண்மையானதாகவும், முடிந்தவரை வெளிப்படையாகவும் இருக்கட்டும், மேலும் அவர் உனக்குச் சொல்ல விரும்பும் அனைத்தையும் கேட்க நீ கவனத்துடன் இருக்க வேண்டும்.

உன் இருதயத்தைக் கவனித்துக் கொள், உன் இருதயத்திலிருந்துதான் ஜீவன் வெளிப்படுகிறது. வேதம் சொல்வது போல், "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்." (நீதிமொழிகள் 4:23)

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

மனநலமும் உடல்நலமும் எப்படித் தொடர்புடையவை?

விஞ்ஞானபூர்வமாக மனநலத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருப்பது உண்மை என்பதை நாம் பலரும் அறிந்திருப்போம். இதைப்பற்றி நம் ஆண்டவர் வேதாகமத்தில் என்ன கூறியிருக்கிறார் என்பதை இந்த திட்டத்தில் ஆராய்ந்து பார்ப்போம். வாருங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=emotionalhealth