அன்னாள்மாதிரி
குணநலன் 2 :பொறுமையுள்ளவள்
அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து, அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
1 சாமுவேல் 1:13-15
மேற்கோள் காட்டிய வசனங்கள், ஆசாரியரான ( இக்காலத்தில் பாஸ்டர் எனப்படுபவர்) ஏலி அன்னாள் ஜெபிக்கும் நிலையைப் பார்த்து தவறாக புரிந்து கொண்டு திட்டியதை வாசிக்கிறோம்.
ஏற்கனவே பாரத்துடன் ஆலயத்தை தேடி வந்த அன்னாளுக்கு கெட்ட பெயரா? நாம் அந்த சூழ்நிலையில் இருந்தால் என்ன செய்திருப்போம்?
அச்சமயத்தில் அன்னாளோ பொறுமையுடன், நான் குடிக்கவில்லை நான் ஜெபம் பண்ணுகிறேன் என்றாள். ஆனால் எதற்காக ஜெபம் பண்ண வந்தாள் என்பதை அவள் சொல்லவில்லை. பெரும்பாலான கிறிஸ்தவர்கள், வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வரும்போது முதலில் பாஸ்டரிடம் பகிர்ந்து கொண்டு ஜெபிப்பதுண்டு. ஆசாரியனிடத்தில் கூட தன்னுடைய கஷ்டத்தை விளக்காமல் தேவனிடம் மாத்திரமே அதை ஊற்றி இருந்தாள்.
ஏலியும்,தான் தவறாக நினைத்து விட்டேன் என்று அறிந்து, பின், அவளை ஆசீர்வதித்து, உன் ஜெபம் கேட்கப்படக்கடவது என்றார்.
தாவீது என்னும் ராஜா தன் மகனால் துரத்தப்படும் போது அழுது கொண்டே வெறும் காலால் நடந்து வேதனையோடு போகும் வழியில், சீமேயி என்பவன் தாவீதை சபித்துக் கொண்டே நடந்தான். தாவீதின் கூட இருந்தவர்கள் அவனைக் கொல்லுவதற்கு உத்தரவு கேட்டார்கள். ஆனால் தாவீதோ அதற்கு சம்மதியாமல் பொறுமையாக இருந்தார். ஒரு நாள் வந்தது, அந்நாளில் சீமேயி தாவீதிடம் வந்து மன்னிப்பு கேட்டு, அவர் கையின் கீழ் இருந்தான்(2 சாமு 16:5-12,19:16-23).
தன்னை புரிந்து கொள்ளாமல் தன் நற்செயலை தவறாய் பேசும் போது பொறுமையாய் எடுத்துரைக்கும் ஆற்றல் இயேசு கிறிஸ்துவின் பண்புகளில் ஒன்று ஆகும். அதுபோல் நாம் சில நேரங்களில் எடுத்துரைத்தும் ஏற்றுக்கொள்ளாதவர்களை தேவன் பார்த்துக்கொள்வார் . உங்கள் பொறுமைக்கு தக்க பலன் நிச்சயமாய் உண்டு. உங்கள் நீதியை ஏற்ற வேலையில் விளங்க பண்ணுவார்.
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
ரோமர் 12:12
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அன்னாள் என்பவள் எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி. இவள் சக்களத்தியாகிய பெனின்னாளுக்கு பிள்ளைகள் உண்டு. இந்தக் குடும்பம் முழுவதும் வருஷந்தோறும் சிலோவிலே கர்த்தரை பணிந்து கொள்ளவும் பலியிடவும் போய் வருவார்கள். ஆகவே இவர்கள் தேவபக்தியுள்ளவர்களாகவும், காளைகளை பலியிடுவதனால் (1 சாமு 1:24) இவர்கள் ஐஸ்வர்யவான்கள் என்றும் விளங்குகிறது. கர்த்தரோ அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தார் என்று வேதம் சொல்லுகிறது(1 சாமு 1:5). ஆனால் அன்னாள், தன் மலட்டுத்தன்மையை ஏற்றுக் கொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையில் இருந்த விசாரத்தை அவள் எப்படி வெற்றியாக மாற்றினாள் என்பதை தியானிக்கலாம் . இன்று உங்களுக்கு இருக்கும் நிந்தை, அவமானம், தோல்வி விரக்திக்கு காரணம் என்ன? அவைகளை ஜெயிக்கும் வழி அன்னாளின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள முடியும். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். சங்கீதம் 84:6. அதோடு கூட,அவள் கடந்து போன இச்சூழ்நிலையின் மூலமாக அவளுடைய குண நலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய இந்திய மறுமலர்ச்சி அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/