புதையல் வேட்டை 1மாதிரி

புதையல் வேட்டை 1

5 ல் 1 நாள்

ஆண்டவர் உன்னை தேர்ந்தெடுத்தார், சிறப்பானது

பிடி

ஒரு முதல் இடத்துக்கான கோப்பையை வெல்வது அருமையாக இருக்குமல்லவா? அந்த பளபளப்பான தங்கக் கோப்பையை வென்று, ஒரு பெரிய புன்னகையுடன், உற்சாகமான கூட்டத்திற்கு முன் அந்த கோப்பையை மேலே உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பதை கற்பனை செய்து பாரு!

முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான உபசரிப்பு பெறுவது மிகவும் நன்றாகத் தான் இருக்கும்--ஆனால் அன்றாட யதார்த்தம் எப்போதும் இனிமையாக இருப்பதில்லை…நீ தேர்வு செய்யப்படாத, அல்லது போட்டியில் தோற்றுப்போன நேரங்கள், நீ மறக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட நேரங்களை பற்றி நினைத்தாயா? அது உன்னை எப்படி உணரச் செய்கிறது? எனக்குத் தெரியும் - நீ அதை பற்றி சிந்திக்காமல் இருப்பது நல்லது!

சிலநேரங்களில் மற்றவர்கள் உன்னை புறக்கணித்ததாகவோ அல்லது உன்னை மறந்ததாகவோ நீ உணர்ந்திருக்கலாம். ஆனால் நீ வருத்தப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் ஏதோவொன்று, இல்லை இல்லை, யாரோ ஒருவர் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்- சிறப்புமிக்கது-அந்த ஒருவர்தான் மிக முக்கியமானவர்-சரியாக நினைத்தாய், அது ஆண்டவர்தாமே!

சரி, நீ ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி வேதாகமத்தில் எங்கே பேசப்பட்டிருக்கிறது? எடுத்து பாரு...

படி

“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே…”
எபேசியர் 1:4

பார்

ஆண்டவர் உலகத்தை படைப்பதற்கு முன் என்ன செய்தார் என்று இந்த வசனம் சொல்கிறது?

சரியாக சொன்னாய், நம்மை தேர்ந்தெடுத்தார்! நாம் உருவாகுவதற்கு முன், வேறெதுவும் உருவாகுவதற்கு முன் அவர் நம்மை தேர்ந்தெடுத்தார்! ஆம், உலகம் படைக்கப்படுவதற்கு முன், ஆண்டவர் ஏற்கனவே உன்னை குறித்து திட்டமிட்டு, உன்னை வடிவமைத்து, உன்னை தமதாக இருக்கும்படி தேர்ந்துகொண்டார். இதிலிருந்து ஆண்டவருக்கு நீ எவ்வளவு மதிப்புடையவர் என்பதையும் நீ அவருக்கு எவ்வளவு சிறப்பானவர் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா? ஆஹா!

சரி, இதெல்லாம் இருக்கட்டும், ஆண்டவர் என்பவர் யார்? அவர் எந்த நேரத்திலும் மற்றும் எங்கும் உள்ள வல்லமையானவர், முக்கியமானவர் மற்றும் ஆச்சரியமானவர்! ஆண்டவருடன் யாராலும் போட்டியிடமுடியாது... இந்த ஆண்டவர்தான் நம்மை தமதாக இருக்கும்படி தேர்ந்தெடுத்தார். ஆம்! ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் இருப்பதிலேயே மிகவும் சிறந்த விஷயம்! இந்த முழு உலகின் அளவுநிறைந்த கோப்பைகளை காட்டிலும் சிறந்தது! ஆஹா அருமை!

எடு

இப்போது உனக்கு புரிந்திருக்கும். ஆண்டவர் உன் மீது வைத்துள்ள மதிப்பின் அளவை நீ உணராமல் இருந்திருக்கலாம்--ஆனால் நீதான் அவருடைய உலகம். இன்று உனக்கான முக்கியமான கேள்வி இதோ...

ஆண்டவர் உன்னை பொக்கிஷமாக பார்ப்பது, உனக்கு என்ன பயன்? நீ எவ்வாறு செயல்பட வேண்டும்?

நீ ஒரு நிமிடம் எடுத்து, அவர் நல்லவர் என்று அவருக்கு நன்றி சொல்லலாமல்லவா? அவர் உன்னை தேர்ந்தெடுத்ததற்காக நன்றி சொல். அவர் தேர்ந்தெடுத்ததினால் நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பதை அவரிடம் சொல்.

நீ சூப்பர்,

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 1

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் கண்டறிதல். டோக்கியோவில் உள்ள NewDayToDayவின் டாக்டர் Andy Meeko அசலாக எழுதிய உலகளாவிய குழந்தைகள்/இளைஞர் சீடத்துவ தொடரை அடிப்படையாக கொண்ட புதையல் வேட்டை முயற்சி.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Miracle Every Day Japan க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.treasurehuntproject.com/