புதையல் வேட்டை 1மாதிரி

புதையல் வேட்டை 1

5 ல் 3 நாள்

நம்முடைய சுதப்பல்கள் அவருடைய மகிமைக்காக

பிடி

புதையல் வேட்டை பாக்கெட்-மங்காவைப் படித்திருக்கிறாயா? (இல்லையெனில், இந்தத் திட்டத்தின் முடிவில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.) காமிக்கில் சிறுவன் கேலி செய்பவர்களால் துன்புறுத்தப்பட்டது நினைவிருக்கிறதா? கேலி செய்பவர்களால் அவனது கண்ணாடியைப் பிடிங்கிக்கொண்டனர், அவனால் பார்க்க முடியவில்லை. ஹிகாரி உதவ முயன்றாள், ஆனால்…

உனக்கு தெரிந்த ஒருவர் இப்படி அச்சுறுத்தப்படுவதை நீ பார்த்தல் என்ன செய்வாய்? நீ ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருக்கிறாய் என்று கற்பனை செய்துகொள், நீ சென்றுகொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் அலறும் சத்தம் உனக்கு கேட்கிறது. நீ நெருங்கி வரும்போது, யாரோ ஒருவர் உன் வகுப்பில் படிக்கும் இன்னொருவரை தவறாக நடத்துவதைக் காண்கிறாய். நீ என்ன செய்வாய்? நீ உதவி செய்தால் நீயும் அவர்கள் அச்சுறுத்த ஒரு இலக்காக மாறலாம். இதை தவிர்ப்பாயா? அல்லது எதிர்கொள்வாயா? நீ தைரியமாக இருப்பாயா? அல்லது ஓடுவாயா?

நமக்காக நிற்கும் நண்பர்களை நாம் அனைவரும் விரும்புகிறோம். நாம் ஆபத்தில் இருக்கும்போது, ​​நமக்காக போராடும் ஒரு நண்பர் வேண்டுமென்று நாம் அனைவரும் விரும்புகிறோம். அதிர்ஷ்டவசமாக, நமக்கு அத்தகைய நண்பர் ஒருவர் இருக்கிறார். இயேசுவே மிகச் சிறந்த நண்பர், ஏனென்றால் அவர் நமக்காக எழுந்து நின்று, நம்மைக் இரட்சித்தார், அது அவருக்கு மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக இருந்தாலும் கூட. அவர் அப்படி செய்தது அவர் வாழ்நாட்களை மட்டுமல்ல அவர் உயிரையே அர்ப்பணிக்க வேண்டியதாயிற்று.

அவர் நமக்காக என்ன செய்தார் என்பதை முழுமையாக விவரிக்கும் ஒரு சிறிய வசனம் வேதாகமத்தில் உள்ளது.

படி

“நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.”
1 பேதுரு 2:24

பார்

இயேசு சிலுவையில் ஏறியதற்கான காரணம் என்ன?

அவர் நம் பாவங்களை அல்லது நாம் நம்மீது குவித்து வைத்திருக்கும் கெட்ட விஷயங்களை- ஆவிக்குரிய விஷயத்தில் நாம் செய்யும் சுதப்பல்கள் போன்றவற்றை அவர் மீது எடுத்துக் கொள்வதற்காக. ஏனென்றால் இப்படிப்பட்டவை இறுதியில் நம்மை நரகத்தில் தள்ளும்.

ஆனால் ஒருவர் இதற்காக ஏன் சாக வேண்டும்?

ஏனென்றால் பாவம் அவ்வளவு அபாயமானது!

பாவம் எவ்வளவு மோசமானது என்பதை அறிய, ஆண்டவரைப் பற்றிய ஒரு விஷயத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும் - ஆண்டவர் பரிசுத்தமானவர். "புனிதம்" என்றால் என்ன? இப்படி யோசித்துப்பாரு: ஒரு பிரகாசமான வெள்ளை திருமண ஆடையை கற்பனை செய்து பார் - அது வெண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கிறது - ஒரு புனிதமான பொருளைப் போல. இப்போது, ஒருபோதும் குளிக்காத, அழுக்கு மற்றும் கசடு பூசப்பட்ட ஒருவரை நினைத்துப்பாரு. ஆவிக்குரிய பார்வையில் பாவம் இதுபோன்றதுதான். இந்த நபர், தூய வெள்ளை திருமண ஆடையில் இருக்கும் மணமகளை கட்டிப்பிடிப்பதை நினைத்து பாரு. அச்சச்சோ! முடியவே முடியாது இல்லையா?

இப்போது சிலுவையை நினைத்துப் பாரு. இது உலகின் மிகவும் பிரபலமான சின்னமாகும். சிலுவை என்பது ஆண்டவரின் பரிசுத்தம் மற்றும் அன்பு ஆகிய இரண்டும் குறுக்கிட்டு சந்திக்கும் இடம். சிலுவைப் பாடு என்பது ஒரு கொடுமையான விஷயம், ஆனால் அதன் மூலமாக மிக அற்புதமான ஒரு விஷயம் விளைந்தது! சிலுவையின் காரணமாக, உன்னுடைய பாவமும் மரணமும் இயேசுவிடம் சென்றது, அவருடைய பரிசுத்தமும் வாழ்வும் உனக்குச் சென்றது. இது ஒரு பெரிய பரிமாற்றம்! ஒரு நல்ல பரிமாற்றம் அல்ல, நியாயமான பரிமாற்றம் அல்ல, ஆனாலும் இயேசு அதைச் செய்தார், ஏனென்றால் அவர் அன்பின் நிமித்தமாக உன்னை காப்பாற்ற விரும்பினார்!

பின்னர் மூன்றாம் நாளில், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார், பாவத்தின் வல்லமையை அழித்தார், வேதாகம வசனம் சொல்வது போல், உன்னை குணப்படுத்தினார்.

எடு

இந்த வாரம் தினமும் காலையில் நேரம் ஒதுக்குங்கள் உனக்காக போராடியதற்காகவும், சிலுவைக்குச் சென்றதற்காகவும், உன் பாவத்தைப் போக்கியதற்காகவும் அவருக்கு நன்றி சொல். மேலும், நீ சிலுவையை பார்க்க நேரிடும் ஒவ்வொரு முறையும், உன் மனதிற்குள் "நன்றி இயேசுவே" என்று சொல்ல மறவாதே.

நீ சூப்பர்,

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 1

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் கண்டறிதல். டோக்கியோவில் உள்ள NewDayToDayவின் டாக்டர் Andy Meeko அசலாக எழுதிய உலகளாவிய குழந்தைகள்/இளைஞர் சீடத்துவ தொடரை அடிப்படையாக கொண்ட புதையல் வேட்டை முயற்சி.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Miracle Every Day Japan க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.treasurehuntproject.com/