புதையல் வேட்டை 1மாதிரி

புதையல் வேட்டை 1

5 ல் 4 நாள்

ஒரு அதிசய புத்தகமா?

பிடி

யதார்த்தத்தை மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த புத்தகம் இருந்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பார். அது நீண்ட காலமாக மறக்கப்பட்டுவிட்டது... தங்கப் பக்கங்கள் அவற்றின் பிரகாசத்தை இழந்துவிட்டன, மேலும் அதன் அடர்த்தியான பொறிக்கப்பட்ட உறை தூசியின் கீழ் மறைந்துள்ளது... ஆனால் அது உயிருடன் இருக்கிறது, யாராவது அதைக் கண்டுபிடிப்பதற்காக காத்திருக்கிறது...

இந்தப் புத்தகத்தைப் படிப்பவர் யாராக இருந்தாலும், உலகின் மிகப் பெரிய ரகசியங்களைத் கண்டறிய முடியும், பிரபஞ்சத்தின் மர்மங்களைக் தெரிந்து கொள்ள முடியும்... இந்தப் புத்தகத்தைப் பெற நீ என்ன செய்வாய்? இதில் ஈடுபடுவது மெர்சலாக இருக்கலாம்... ஏனென்றால் நீ இந்த புத்தகத்தின் பக்கங்களை திறந்தால், எல்லாமே மாறக்கூடும்.

ஆனால் பொறு, இது போன்ற ஒரு புத்தகம் உண்மையாக உள்ளது - இதைப் பெற்று, படிப்பதற்கு தைரியம் உள்ளவர்களுக்கு இது நம்பமுடியாத ஒரு அற்புத அனுபவத்திற்கான கதவைத் திறக்கும்… அந்த புத்தகம் புத்தகங்களின் புத்தகம், ஒரே ஒரு புத்தகம், அதன் பெயர் "புத்தகம்". (பைபிள் "Bible" என்பதன் பொருள் புத்தகம் என்பதாகும்).

வேதாகமம் ஏன் தனித்துவமானது? ஏனென்றால் அது ஆண்டவரின் புத்தகம், தேவனின் வார்த்தைகள். வல்லமை மற்றும் ஞானத்தைப் பற்றி பேசினால், ஆண்டவரின் வார்த்தை உன் மனதில் நுழைந்து உன் இதயத்தை நிரப்புவதை விட பெரியது எதுவுமில்லை!

படி

“அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.”
மத்தேயு 4:1-4

பார்

அப்படியானால், இயேசுவின் கூற்றுப்படி தேவனுடைய வார்த்தை எவ்வளவு முக்கியமானது?

சரி, வேதாகமத்திலுள்ள கதையைப் பாரு. இயேசு 40 நாட்கள் இரவும் பகலும் உணவின்றிப் இருந்திருக்கிறார்-அவர் பட்டினியாக இருக்கிறார், உணவு உண்ணாததால் மரணத்தின் விளிம்பில் கூட இருக்கிறார்-ஆண்டவரின் வார்த்தையை உணவுடன் ஒப்பிடுகிறார்- பட்டினியால் வாடும் மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஆண்டவருடைய வார்த்தையும் பெரியது!

நாம் எளிதில் தவறவிடக்கூடிய ஆண்டவருடைய வார்த்தையின் முக்கியத்துவத்தைப் பற்றி இயேசு தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்.

இந்த உலகம் எப்படி உருவானது என்பதை பற்றி நாம் முன்னே பார்த்தது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அவர் ஒரு வார்த்தை பேசுவதன் மூலம் பிரபஞ்சம் வெடித்து உருவாகியது என்றால். அதுதான் வல்லமை! ஆண்டவருடைய வார்த்தை எல்லாவற்றையும் விட வல்லமையானது - உண்மையில், நாம் பார்க்கும் மற்றும் நாம் அறிந்த அனைத்தும் அவருடைய வார்த்தையிலிருந்து வந்தவை! இந்த வார்த்தைகள் உன் மனதிலும் வாழ்விலும் நுழைந்தால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப்பார். ஆஹா!

எடு

ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தையாவது செலவிட்டு, உன் வாழ்க்கையில் அவருடைய வார்த்தைகளை பிரயோஜனப்படுத்த இப்போதே திட்டமிடு. ஒவ்வொரு நாள் காலையிலும், நீ வேறு எதையும் செய்வதற்கு முன், அவருடைய வார்த்தையைப் படி (யோவான் புத்தகத்தில் ஆர்மபிக்கலாம்), ஆண்டவருடைய வார்த்தையை நேசி, விசுவாசி, மேலும் பெரிய காரியங்களை எதிர்பார்திரு.

நீ சூப்பர்,

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 1

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் கண்டறிதல். டோக்கியோவில் உள்ள NewDayToDayவின் டாக்டர் Andy Meeko அசலாக எழுதிய உலகளாவிய குழந்தைகள்/இளைஞர் சீடத்துவ தொடரை அடிப்படையாக கொண்ட புதையல் வேட்டை முயற்சி.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Miracle Every Day Japan க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.treasurehuntproject.com/