திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வுமாதிரி

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு

5 ல் 2 நாள்

எகிப்திலிருந்து மீட்கப்பட்ட திருமணம்

கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். யாத்திராகமம்- 13:14b

இஸ்ரவேலை மீட்ட மோசே: தேவன், இஸ்ரவேலர்களின் கூக்குரலைக் கேட்டு, ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். ஆண்டவர் மோசேயை இஸ்ரவேலின் மீட்பராகத் தேர்ந்தெடுத்தார்.

தேவன் இஸ்ரவேலருக்கு செய்த வாக்குத்தத்தம்: "நான் கர்த்தர், நான் உன்னை எகிப்தியரின் சுமைகளிலிருந்து விடுவிப்பேன், நான் உன்னை அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பேன், ஓங்கியகையினாலும் மகாதண்டனைகளினாலும் உன்னை மீட்டு விடுவிப்பேன்." யாத்திராகமம் 6:6. இஸ்ரவேலரின் சிறையிருப்பிலிருந்து விடுவிக்க மோசேயை தேவன் தன் கருவியாகப் பயன்படுத்தினார். இஸ்ரவேலைத் தம்முடைய வல்லமையான செயல்களால் விடுவித்தார்.

இயேசு கிறிஸ்து- விடுவிப்பவர் - வல்லமையான மீட்பர் : எகிப்திலிருந்து மோசேயை கொண்டு ஆண்டவர் இஸ்ரவேலை விடுவித்த நிகழ்வு, ஆண்டவர் மனுக்குலத்தை மீட்கும் பணியை, இயேசுவைக் கொண்டு செய்ய இருந்ததை வெளிப்படுத்துகிறது.இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளானதுபோல, ஆதாம் ஏவாளிடமிருந்து ஆரம்பித்த பாவம், தொடர்ந்து மனித குலத்தையே பாவத்திற்கும் சாத்தானுக்கும் அடிமையாக மாற்றியது. பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மனிதகுலத்தை விடுவிப்பதற்கும் சாத்தானை வெல்லவும் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். மனுக்குலத்தை மீட்க இயேசு தம் விலையேறப்பெற்ற இரத்தத்தை விலைக் கிரயமாக கொடுத்தார். இயேசுவின் மீட்பின் செயலால் இன்று நீங்களும் நானும் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம்.

நம் திருமணத்தின் மீட்பர் இயேசு: ஆதாம் ஏவாள் பாவம் செய்த பிறகு, திருமணம் அதன் மகிமையை இழந்துவிட்டது. திருமணம் தேவனின் அநாதி திட்டத்தை இழந்தது. திருமணம் கனப்படுத்தப்படவில்லை. ஆனால் இவையனைத்தும் இயேசு இவ்வுலகத்திற்கு வந்ததின் நிமித்தம் மாறிவிட்டது. திருமணங்களுக்கு நற்செய்தி என்னவென்றால் - இயேசு நம் ஆத்துமாவை பாவத்திலிருந்து மீட்க வந்தது மட்டுமல்ல; நம்முடைய கீழ்ப்படியாமையால் நம் திருமணத்திலிருந்து சாத்தானால் திருடப்பட்ட அனைத்தையும் மீட்டுக் கொடுத்தார். உபாகமம் 28இல் சொல்லப்பட்ட திருமணம் மற்றும் குடும்பத்தின் மீதான சாபங்கள் உட்பட அனைத்து சாபங்களையும் இயேசு சிலுவையில் சுமந்து தீர்த்தார். எனவே, இன்று நாம் இயேசுவின் இந்த மீட்பின் செயலை நம்முடைய திருமணங்களில் உரித்தாக்கிக்கொள்ளலாம்.

தேவன் நம் அழுகையைக் கேட்கிறார்; நம் கண்ணீரை காண்கிறார். நம் திருமணத்தில் இழந்த அன்பு, தோழமை, புனிதம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்தையும் தேவனால் மீட்டுத் தர முடியும். அவர் அனைத்தையும் மிகச்சிறந்த வழியில் மீட்டுத்தருவார்.

கணவன் மனைவிக்கிடையே இழந்த அன்பை இயேசுவின் மீட்பின் செயல் புதுப்பிக்கும். இது இச்சை அல்ல, ஒரு தூய்மையான தேவ அன்பாகும். இயேசு சிலுவையில் செய்து முடித்த செயலின் வாயிலாக, நம் திருமணத்திற்கு எதிராக செயல்படும் இருளின் ஆதிக்கத்தின் மேல் அதிகாரம் எடுக்கலாம். ஒவ்வொரு உடன்படிக்கை திருமணத்திற்கும் இதுவே தேவனின் திட்டம்.

நாம் செய்யவேண்டியது- நம்மைத் தாழ்த்தி, நமது திருமணம் தேவனின் ஆசீர்வாதங்களை இழந்து, அது செழித்து வளர்வதற்குப் பதிலாக வெறுமையாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதே. நம்முடைய கீழ்ப்படியாமைக்கு மனந்திரும்பி, நம் திருமணத்தை இயேசு கிறிஸ்து மீட்கும்படி கேட்க வேண்டும். இப்போது, இயேசு நம் திருமணத்தை மீட்டு விட்டார் என்ற நிச்சயத்துடன் எகிப்திலிருந்து கானானுக்கு முன்னேறலாம். நாம் இனி அடிமைகள் அல்ல. நம் திருமணம் இப்போது ராஜாதிராஜாவின் ஆட்சியின் கீழ் உள்ளது!

ஜெபம்: பரலோகத் தகப்பனே, எங்கள் ஆத்துமாக்களை மீட்பதற்காக மட்டுமல்லாமல், எங்கள் கீழ்ப்படியாமை மற்றும் முரட்டாட்டத்தால் எங்கள் திருமணத்தில் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்க உமது குமாரனை அனுப்பியதற்காக உமக்கு நன்றி. திருமணத்தில் இழந்த உண்மையான மற்றும் தூய்மையான அன்பை எங்களுக்கு மீட்டுத் தாரும். நாங்கள் இழந்ததோழமையின் மகிழ்ச்சியையும், சங்கீதம் 127 மற்றும் 128 இல் சொல்லப்பட்ட திருமணத்திற்கான ஆசீர்வாதங்கள் அனைத்தையும் எங்களுக்கு மீட்டுத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு

திருமணம் என்பது ஒரு வாழ்க்கை பயணத்தின் துவக்கம். ஆனால் அது ஒரு பயணத்தின் முடிவாக(destination) கருதும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதினிமித்தம் அந்த ஒரே நாளுக்காக ஆடம்பரமான செலவுகள் நடக்கின்றது. ஆனால் இந்த திருமண பயணத்தில் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பது ஒருவருக்கும் தெரிவதில்லை. திருமண வாழ்க்கையை எகிப்திலிருந்து கானானுக்கு இஸ்ரவேலர் மேற்கொண்ட பயணத்துடன் நாம் ஒப்பிடலாம். இந்த வாழ்க்கை பயணத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடையாளம் காண ஆண்டவர் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் ஜெபம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக SOURCEக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://sourceformarriage.org/