கட்டளைமாதிரி

கட்டளை

3 ல் 1 நாள்

புறப்பட்டுப் போவதற்கான கட்டளை உண்டு – எல்லோருக்கும், எல்லோருக்காகவும்

“பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும்

சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்றார்.” – மாற்கு 16:15

பிரதான கட்டளையை விரிவாக ஆய்வு செய்தால், அதில் ஒரு ஆழமான சத்தியத்தைக்

காண முடியும் – அது நமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை மட்டுமல்ல, மாறாக அது

தேவனுக்குள்ளேயே பின்னிப் பிணைந்துள்ள நித்திய பணியாக இருக்கிறது.

இந்தக் கட்டளையின் முழுமுதல் மையம் தேவனுடைய இருதயத்தின் வெளிப்பாடு.

பிதா தம் குமாரனை அனுப்பி இந்தப் பணியைத் துவங்கி வைத்தார், பின்னர் பிதாவும்

குமாரனும் இணைந்து பரிசுத்த ஆவியானவரை அனுப்பி வைத்தார்கள். இப்போது,

இந்த மீட்பு மற்றும் அன்பின் கதையில் இணைந்துகொள்ள நமக்குக் கட்டளை

கொடுத்து, நம்மையும் அனுப்பி வைக்கிறார்.

பிரதான கட்டளை என்பது குறிப்பிட்ட சிலருக்கு அல்லது சில காலங்களுக்கு மட்டுமே

கொடுக்கப்பட்டது என்று அதை மட்டுப்படுத்தும் தவறான கருத்துக்களை முற்றிலும்

அகற்ற வேண்டும். தன்னை கிறிஸ்துவின் சீஷன், அதாவது தேவனுடைய பிள்ளை

என்று சொல்லிக்கொள்ளும் எல்லோருக்கும் இந்தக் கட்டளை

கொடுக்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய பின்னணிகள், திறமைகள் அல்லது குறைவுகள் எப்படி இருந்தாலும்,

பூமியில் தேவராஜ்யத்தைக் கட்ட நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிடத்தக்க பங்கு

உண்டு.

இந்தக் கட்டளையைப் பெற எந்த தேசமோ அல்லது எல்லையோ விதிவிலக்கல்ல.

வேதனைப்படும் ஒவ்வொரு இருதயத்திற்குமான மருந்தையும், ஏக்கம் கொண்ட

ஒவ்வொரு ஆத்துமாவுக்கான பதிலையும் பெற்று ஆயத்தமாகும் நாம், இயேசுவின்

மறுரூபமாக்கும் அன்பிற்கு சாட்சி பகர வேண்டும்.

எந்தவொரு தேசமும் மாற்றமடையாமலும், எந்தவொரு இருதயமும் தொடப்படாமலும்

போய்விடாதபடி மனதுருக்கத்தோடும், உணர்த்துதலோடும் இயேசு கொடுக்கும்

நம்பிக்கையை அறிவிக்க வேண்டும்.

பிரதான கட்டளை என்பது ஒரு ஆலோசனையல்ல, மாறாக அது ஒரு தெய்வீக

கற்பனை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த உலகம் இயேசுவின் அன்பின்

தொடுதல் மற்றும் அவரின் மாறாத அன்பு என்னும் வெளிச்சத்திற்கு ஏங்குகிறது;

அவர்களுக்கு நாம் இயேசுவை அறிமுகப்படுத்த வேண்டும். நம்முடைய தரிசனம்

எல்லைகளைத் தாண்டி, சத்தியத்திற்காக ஏங்கும் எல்லா ஆத்துமாக்களுக்கும், எல்லா

தேசங்களுக்கும், எல்லா மக்கள் கூட்டங்களுக்கும் செல்ல வேண்டும்.

ஆகவே, நாம் நோக்கத்துடன் எழுந்து, தீர்மானமாகப் பணி செய்து, நம்மிடம்

ஒப்புவிக்கப்பட்ட அழைப்பை நிறைவேற்றுவோமாக.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

கட்டளை

“கட்டளை” என்ற இந்த வேதாகமத் திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இது, புறப்பட்டு போய், கிறிஸ்துவின் அன்பை எல்லோரும் அறியச் செய்ய அவருடைய சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீக கட்டளையைப் பற்றிய ஆய்வு. இந்த மூன்று- நாள் பயணத்தில், பிரதான கட்டளையை தேவனிடமிருந்து வந்த தனிப்பட்ட மற்றும்பொ துவான அழைப்பாகக் கொண்டு, அதைக் கைக்கொள்வதன் பெரும் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்வோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Zeroக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.zerocon.in/