கட்டளைமாதிரி

கட்டளை

3 ல் 2 நாள்

புறப்பட்டுப் போவதற்கான கட்டளை உண்டு ... ஆனால் எங்கு போவது?

பிரதான கட்டளையை நிறைவேற்றுவதற்கு தூர தேசங்களுக்குப் பிரயாணம் செய்து,

பெரும் முயற்சி எடுக்க வேண்டும் என பெரும்பாலும் நினைத்துக் கொள்கிறோம். இது

நம்மில் சிலருக்கு, அல்லது பலருக்கு உண்மையாக இருக்கலாம் என்றாலும், நாம்

இருக்கும் இடங்களிலேயே நற்செய்திப் பணி செய்யும் தளங்கள் இருக்கத்தான்

செய்கின்றன.

வீடுகள், நாம் ஈடுபடும் அனுதின உரையாடல்கள், தனிப்பட்ட விதத்தில் நம்மால்

தொடப்படுபவர்கள் என்று நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் தேவராஜ்யத்தை

அறிவிப்பதற்கான அழைப்பு எதிரொலிக்கிறது.

முழு உலகமும் நம் பணித்தளம்தான், ஆனால் அதைக் கண்டுபிடிக்க கடுமையான

பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டியதில்லை.

நாம் இருக்கும் இடமே நமக்கு ஏற்ற இடமாக இருக்கலாம்.

சாதாரணமான ஒவ்வொரு தருணத்திலும் தேவராஜ்யத்திற்கான தாக்கத்தை

ஏற்படுத்தும் அசாதாரணமான ஆற்றல் உண்டு என்னும் சத்தியத்தை

ஏற்றுக்கொள்ளுங்கள்.

நம்முடைய முன்வாசலைத் தாண்டிவிட்டாலே நமக்கு பணித்தளம்தான்; தினமும் நாம்

பார்க்கிற, நமக்குப் பரிச்சயமான முகங்கள்தான் நாம் சுவிசேஷம் அறிவிக்க

வேண்டியவர்கள்.

விசுவாசத்தில் புறப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டு, நிரம்பி வழியும்

அன்போடு, செல்லும் இடங்களில் இயேசுவை தெரியப்படுத்துங்கள்.

2 கொரிந்தியர் 5:20:

“ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல,

நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள்

என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.”

எல்லோரிடமும், எல்லா தேசங்களிலும், எல்லா வீடுகளிலும் கிறிஸ்துவின்

அன்பையும், சத்தியத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான கட்டளை நமக்குக்

கொடுக்கப்பட்டிருக்கிறது. வாஞ்சையோடும், நோக்கத்தோடும் அந்தக் கட்டளைக்குக்

கீழ்ப்படிவோமாக. பிரதான கட்டளையை நிறைவேற்றும்போது, உலகத்திற்கு

இரட்சிப்பையும், மறுரூபத்தையும் கொடுக்கும் தேவனுடைய நித்திய திட்டத்தில்

பங்குபெறுகிறோம் என்பதை அறிந்து அன்புடன் அதைச் செய்வோம்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

கட்டளை

“கட்டளை” என்ற இந்த வேதாகமத் திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இது, புறப்பட்டு போய், கிறிஸ்துவின் அன்பை எல்லோரும் அறியச் செய்ய அவருடைய சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீக கட்டளையைப் பற்றிய ஆய்வு. இந்த மூன்று- நாள் பயணத்தில், பிரதான கட்டளையை தேவனிடமிருந்து வந்த தனிப்பட்ட மற்றும்பொ துவான அழைப்பாகக் கொண்டு, அதைக் கைக்கொள்வதன் பெரும் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்வோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Zeroக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.zerocon.in/