கட்டளைமாதிரி
புறப்பட்டு போவதற்கான கட்டளை உண்டு ... எங்கு தொடங்குவது?
கிறிஸ்துவுடன் நடப்பதான நம் வாழ்க்கையில் இன்னும் அதிக ஆழமாக
செல்லும்போது, நமக்குள்ளிருந்து பொங்கி வழியும் அவரது அன்பு பிறரை
சந்திக்கும்படி நம்மை உந்தித் தள்ளுகிறது.
சுவிசேஷத்திற்கு சாட்சி பகருமாறும், தேவனுடைய நன்மைத்தன்மையை
அறிவிக்கவும், இயேசுவுக்குள் காணப்படும் வாழ்க்கை-மாற்றும் வல்லமையை
சாட்சியாக அறிவிக்குமாறும் பிரதான கட்டளை நம்மைப் பயில்காட்டி அழைக்கிறது.
தயவான ஒவ்வொரு செயலும், அன்பான ஒவ்வொரு வார்த்தையும் இரட்சிப்பின்
ஆழமான சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ளும் நம் பணியின் அங்கங்கள் ஆகின்றன.
பிரதான கட்டளையைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு, முதலில் தேவன் நமக்குச்
செய்த ஆச்சர்யமான காரியத்தை உணர வேண்டும். சுவிசேஷம் என்பது வெறும்
நற்செய்தி மட்டுமல்ல; அது உலகம் அறிந்த செய்திகளிலேயே மாபெரும்
செய்தியாகவும் இருக்கிறது! கிறிஸ்துவின் சீஷராக இருப்பதன் சந்தோஷத்தை
திறம்படப் பகிர்ந்துகொள்ளும் முன், அந்த சந்தோஷத்தை முதலில் நாம் தனிப்பட்ட
விதத்தில் அனுபவிக்க வேண்டியது அவசியம். நாம் அவருடைய சத்தியம் மற்றும்
கிருபையின் வெளிச்சத்தில் நடக்கும்போது, இருளிலிருந்து விடுதலை பெற
மற்றவர்களுக்கு உதவ முடியும்.
நம்மைப் போல பிறரையும் நேசிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது
எல்லாவற்றிலும் முதன்மையானது. இந்த அடிப்படை கோட்பாடு எளிய கருத்தாக
இருந்தாலும், அதன்படி வாழ்வது பெரும் சவாலாக இருக்கலாம். இருப்பினும், நம்
வாழ்வில் தேவனைக் கொண்டிருப்பதன் மதிப்பையும், அது நம் வாழ்க்கையில்
ஏற்படுத்தும் மாற்றத்தையும் உண்மையாக உணரும்போது, இந்த ஈவை
மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது இயல்பாக உண்டாகும் ஒரு வாஞ்சையாக
மாறுகிறது.
பிரதான கட்டளையை நிறைவேற்றுவதில் உள்ள மற்றுமொரு முக்கிய அம்சம் ஜெபம்
ஆகும். நாம் பிறருடன் பழகி, அவர்களுக்குள் சுவிசேஷம் என்னும் விதையை
விதைத்து, தண்ணீர்ப் பாய்ச்சுகிறோம்; ஆனால் இறுதியில் விளையச் செய்து,
மறுரூபமாக்குபவர் தேவனே. சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் நம் முயற்சியில்,
ஜெபத்தின் வல்லமையைச் சார்ந்து கொண்டு, நாம் சந்திப்பவர்களின் வாழ்க்கையில்
தேவனுடைய வழிநடத்துதலையும், தலையீட்டையும் நாட வேண்டும்.
நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் உரையாடும்போது, அன்பாக இருக்கும் தேவனே
நம் வார்த்தைகளையும், செய்கைகளையும் வழிநடத்தி, ஒவ்வொரு சந்திப்பையும்
கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிக்கும் தருணமாக மாற்றிக் கொடுப்பாராக.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
“கட்டளை” என்ற இந்த வேதாகமத் திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இது, புறப்பட்டு போய், கிறிஸ்துவின் அன்பை எல்லோரும் அறியச் செய்ய அவருடைய சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீக கட்டளையைப் பற்றிய ஆய்வு. இந்த மூன்று- நாள் பயணத்தில், பிரதான கட்டளையை தேவனிடமிருந்து வந்த தனிப்பட்ட மற்றும்பொ துவான அழைப்பாகக் கொண்டு, அதைக் கைக்கொள்வதன் பெரும் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்வோம்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Zeroக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.zerocon.in/