மன்னிப்பு என்பது ...மாதிரி

ஒரு கொலைகாரனை மன்னிக்க வேண்டுமா? வாய்ப்பே இல்லை!
நமக்கு அநீதி இழைத்தவர்களை மன்னிப்பதன் முக்கியத்துவம் குறித்து நேற்று நாம் விவாதித்தோம். அடுத்த மூன்று நாட்களுக்கு, மன்னிக்க முடியாதவர்களை மன்னித்த சிலரின் உண்மையான ஊக்கமளிக்கும் சாட்சிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்களால் மன்னிக்க முடிந்தால், உங்களாலும் மன்னிக்க முடியும்!
கிளாடி ஸ்டெயின் ஒரு ஆஸ்திரேலிய மிஷனரியான கிரஹாம் ஸ்டெயின்னின் மனைவி ஆவார். 15 ஆண்டுகளாக ஒடிசாவில் ஏழைகளுக்கும் தொழுநோயாளிகளுக்கும் தன்னலமின்றி ஊழியம் செய்த பிறகு, கிரஹாமும் அவர்களது இரண்டு இளம் மகன்களும் அரசியல்வாதிகள் மற்றும் மதவாதிகள் கும்பலின் சதியால் பரிதாபமாக உயிருடன் எரிக்கப்பட்டனர்.
நினைத்துப் பார்க்க முடியாத இந்த இழப்பு ஏற்பட்டபோதிலும், கிளாடி அவர்கள் தனது மகளுடன் இணைந்து, இந்தியாவில் தங்கி, தானும் தன் கணவரும் செய்து வந்த ஊழியத்தைத் தொடர முடிவு செய்தார். அவர் தொடர்ந்து இந்தியாவில் தங்கியது மட்டுமல்ல, தன் குடும்பத்தைக் கொன்ற நபர்களை மன்னிக்கவும் முடிவு செய்தார்! 😮
கிளாடி அவர்கள் தனது வார்த்தைகளில் இவ்வாறு கூறினார்:
"நான் கொலையாளிகளை மன்னித்துவிட்டேன், எனக்குள் கசப்பு இல்லை, ஏனென்றால் மன்னிப்பு குணமாக்குகிறது, நமது தேசம் வெறுப்பு மற்றும் வன்முறையிலிருந்து குணமடைய வேண்டும். கிறிஸ்துவுக்குள் ஆண்டவர் என்னை மன்னித்ததுபோல, தம்மைப் பின்பற்றுபவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார். வேதாகமத்தில்: 'எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்,' என்று சொல்லப்பட்டுள்ளது. (யோவான் 20:23) எனவே, நித்தியத்தின் வெளிச்சத்தில், பரலோகத்திற்குள் நுழைவதற்கு நம் அனைவருக்குமே பாவ மன்னிப்பு தேவை."
அவரது அறிக்கையானது சர்வதேச தலைப்புச் செய்திகளில் வெளியானது. மற்றும் அவரது வார்த்தைகள் தேசிய செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டன எத்தனை ஆச்சரியமான சாட்சி இது! அவருடைய மன்னிப்பு செயல், லட்சக்கணக்கான மக்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பெறுவதற்கும், அன்றைய செய்தித்தாளில் வேதத்தை வாசிப்பதற்கும் கதவைத் திறந்தது.
தனக்குத் தீங்கிழைத்த குற்றவாளிகளை கிளாடி ஸ்டெயின் அவர்களால் மன்னிக்க முடியுமானால், உங்களுக்குத் தீங்கிழைத்தவர்களையும் உங்களால் மன்னிக்க முடியும் என்று எனக்குத் தெரியும்.
நேற்று நீங்கள் தயாரித்த பட்டியலைப் பார்ப்போம். அதில் யாருடைய பெயர் இருக்க வேண்டும்? அவர்களை மன்னிக்கவே முடியாது என்று எண்ணி பெயரை எழுதாமல் விட்டுவிட்டீர்களா? இதுவே அதற்கான நேரம்! இந்த மன்னிப்புப் பயணத்தில் நாம் சேர்ந்து பயணம் செய்வோம்! 🤝
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

மன்னிப்பு என்பது ஒருவருடைய மனதை மற்றும் இருதயத்தை மாற்றும் சக்தி கொண்டது. அது மன்னிக்கும் நபருக்கும், மன்னிக்கப்பட்ட நபருக்கும் மன அமைதி மற்றும் சமாதானத்தை கொண்டுவரும். இந்த பயணம் உங்கள் வாழ்க்கையில் மன்னிப்பின் வல்லமையை உணர்த்தி, இதன் மூலம் மனதின் அமைதியையும், பிறருடன் சமாதானமாய் வாழவும் உதவும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamil-forgiveness-is
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

இளைப்பாறுதலைக் காணுதல்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

தனிமையும் அமைதியும்

மனஅழுத்தம்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்
