மன்னிப்பு என்பது ...மாதிரி

மன்னிப்பு என்பது ...

9 ல் 3 நாள்

கொலைகாரர்களாயினும் அவர்கள் மத்தியில் வாழ்ந்துகாட்டுங்கள்

கொலைகாரர்கள் மத்தியில் உங்களால் வாழ முடியுமா? இது மிகவும் விசித்திரமான கேள்வியாகத் தோன்றலாம். ஏன், யாராவது கொலையாளிகளுக்கு மத்தியில் வாழ விரும்புவார்களா? ஆனாலும், எலிசபெத் எலியட்டின் கதையில் நாம் இதை வாசிக்கலாம். அவர் கொலைகாரர்கள் மத்தியில் வாழத் தீர்மானித்தார், வேறு எந்தக் கொலைகாரர்களும் அல்ல, தன் சொந்தக் கணவரைக் கொலை செய்த கொலைகாரர்கள்தான் அவர்கள்!

ஜிம் மற்றும் எலிசபெத் எலியட் ஆகியோர் அதுவரை யாரும் சந்தித்திராத பழங்குடியினர் மத்தியில் சுவிசேஷர்களாக சென்றனர். அவர்கள் பழங்குடி மக்களுடன் நீண்ட காலமாக நட்பு வைத்துக்கொள்ள முயற்சி செய்தனர். ஒரு நாள் ஜிம் மற்றும் அவரது நண்பர்கள் நேருக்கு நேர் அவர்களைச் சந்திக்க முயன்றனர், ஆனால் அவர்கள் உடனடியாக பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.

கொலையாளிகளை மன்னிக்க எலிசபெத் முடிவு செய்தார், மேலும் அவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்தார். இறுதியில், அவர் வெற்றியடைந்து, பழங்குடியினருடன், தனது கணவரின் கொலையாளிகள் மத்தியிலேயே, பல ஆண்டுகளாக வாழ்ந்தார். அவருடைய விசேஷித்த மன்னிப்பு செயல் பழங்குடியினருக்கு ஒரு சாட்சியாக மாறியது.

இதன் விளைவாக, 'காட்டுமிராண்டிகள்' என்று அழைக்கப்படும் பழங்குடியினருக்குள் வன்முறைகள் வெகுவாகக் குறைந்து, கொலைக் குற்றங்கள் குறைந்தன. பல உறுப்பினர்கள் கிறிஸ்தவர்கள் ஆனார்கள் மற்றும் ஒரு உள்ளூர் திருச்சபை பிறந்தது. மன்னிக்க வேண்டும் என்று எலிசபெத் அவர்கள் எடுத்த தீர்மானம் மிகப்பெரியது மற்றும் கடினமானது, ஆனால் அதற்கு ஒரு அற்புதமான பலன் கிடைத்தது.

எலிசபெத்தின் சொந்த வார்த்தைகளில் நாம் இதை வாசிக்கலாம்:

"கிறிஸ்துவைப் பின்தொடர்வது என்பது அவர் நடந்த பாதையில் நடப்பதாகும், நம்மை மன்னிக்க, அவர் மரிக்க வேண்டியிருந்தது. மன்னிப்பு என்பது விட்டுக்கொடுத்தல். இது சரணடைதல். எவராலும் அதை நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது, இயேசு தம் ஜீவனை தாமாக முன்வந்து கொடுக்கவில்லை என்றால், எவராலும் அதை எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் அவர் செய்ததுபோல் நாமும் செய்யலாம். கிறிஸ்துவின் நிமித்தம் தன் ஜீவனையோ, புகழையோ, 'நற்பெயரையோ' அல்லது வேறு எதையும் இழக்கும் மனிதன், அதை இரட்சித்துக்கொள்வான் என்ற உறுதியான அறிவில், அதனால் ஏற்படும் இழப்பை, அது எத்தகைய இழப்பாக இருந்தாலும் எழுதிக் கொடுக்கலாம்.” இதை வலியுறுத்தும் வேத பகுதியை இங்கே காணலாம் (மத்தேயு 16:24- 25).

எலிசபெத்தின் கதை உங்களை ஊக்கப்படுத்தியதா? அதை நான் அறிய விரும்புகிறேன்!

நாம் சேர்ந்து ஜெபிப்போம்:

'ஆண்டவரே, நான் மற்றவர்களைக் காயப்படுத்தினால், மன்னிப்பு கேட்க எனக்கு வலிமை தாரும். மற்றவர்கள் என்னைக் காயப்படுத்தினால், மன்னிக்கும் பெலத்தைத் தாரும், ஆமென்.'

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

மன்னிப்பு என்பது ...

மன்னிப்பு என்பது ஒருவருடைய மனதை மற்றும் இருதயத்தை மாற்றும் சக்தி கொண்டது. அது மன்னிக்கும் நபருக்கும், மன்னிக்கப்பட்ட நபருக்கும் மன அமைதி மற்றும் சமாதானத்தை கொண்டுவரும். இந்த பயணம் உங்கள் வாழ்க்கையில் மன்னிப்பின் வல்லமையை உணர்த்தி, இதன் மூலம் மனதின் அமைதியையும், பிறருடன் சமாதானமாய் வாழவும் உதவும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamil-forgiveness-is