மன்னிப்பு என்பது ...மாதிரி

ஒரு பாம்பு உங்களைக் கடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? 🐍
யாராவது உங்களை எப்போதாவது காயப்படுத்திவிட்டு, உங்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார்களா?
மன்னிப்பின் கடினமான பகுதி நீதிக்கான நமது உரிமையை விட்டுக்கொடுப்பதுதான். நம்மைக் காயப்படுத்திய நபர், அதற்கான விளைவுகளை சந்திக்காமல் இருந்தால், அது மிகவும் நியாயமற்றது என்று நாம் நினைக்கலாம். ஆனால் என்னிடம் ஒரு நல்ல செய்தி இருக்கிறது: நம் ஆண்டவர் நீதியுள்ள தேவன்!
"அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்". (உபாகமம் 32:4)
இறுதியில் ஆண்டவர் நீதி செய்வார் என்று, ஆண்டவரை விசுவாசிக்க கற்றுக்கொள்வதுதான் மிகவும் கடினமான பகுதி.
“கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார். அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார்." (சங்கீதம் 9:7-8)
நமது நீதிக்கான அவசியத்தைப் பிடித்துக்கொள்வதும் அதைவிட மோசமான காரியமான, நீதியை நம் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுப்பதும் மன்னிப்புக்குப் பின் கிடைக்கும் மகத்தான ஆசீர்வாதங்களைத் தவறவிடச் செய்யும்.
இதைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள்: மன்னிப்பதற்கு முன்பே நீதி கேட்பது என்பது, பாம்பு கடித்த பின், உங்கள் உடலில் இருந்து விஷத்தை அகற்ற மருத்துவமனைக்கு விரைந்து செல்வதற்குப் பதிலாக, உங்களைக் கடித்த பாம்பைத் துரத்திக்கொண்டு ஓடுவது போன்றதாகும்.
மன்னிக்காததால் வரும் விஷம், உங்களுக்குள் இருக்கும் பாம்பின் விஷம் போன்றது. தப்பிச் சென்ற பாம்பை விட இது உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவித்துவிடும்! உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் 'பாம்புகளை' கையாள்வார் என்று விசுவாசியுங்கள். அவர் சரியான நேரத்தில் நீதியை நிலைநாட்டுவார் என்று நம்புங்கள். நீங்கள் இவ்வுலக வாழ்வில் அதைப் பார்க்க வேண்டுமா, அல்லது மறுஜென்ம வாழ்வில் பார்க்க வேண்டுமா என்பது ஆண்டவரது கரத்தில்தான் உள்ளது.
நீங்கள் இன்னும் பாம்புகளைத் துரத்திக்கொண்டிருக்கிறீர்களா? குறிப்பிட்ட நபர்களைக் குறித்து, நீதிக்காக அவர்களைப் பழிவாங்கும் எண்ணம் உங்கள் இதயத்தில் இருந்தால், முதல் நாளில் நீங்கள் உருவாக்கிய பட்டியலில் அவர்களின் பெயர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சற்று நேரம் ஒதுக்கி, தனித்தனியாக பெயர்களைப் பார்த்து, ‘______, நான் உன்னை மன்னிக்கிறேன்' என்று சொல்லுங்கள். உங்களால் முடியும்!! இப்போது, அவர்களை மன்னித்து, விட்டுவிடுவதற்கான ஒரு அடையாளச் செயலாக, அந்தப் பட்டியலை எரிக்க (அல்லது கிழிக்க) வேண்டிய நேரம்தான் இது! இந்தச் செயல் உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்வைத் தந்தது?
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

மன்னிப்பு என்பது ஒருவருடைய மனதை மற்றும் இருதயத்தை மாற்றும் சக்தி கொண்டது. அது மன்னிக்கும் நபருக்கும், மன்னிக்கப்பட்ட நபருக்கும் மன அமைதி மற்றும் சமாதானத்தை கொண்டுவரும். இந்த பயணம் உங்கள் வாழ்க்கையில் மன்னிப்பின் வல்லமையை உணர்த்தி, இதன் மூலம் மனதின் அமைதியையும், பிறருடன் சமாதானமாய் வாழவும் உதவும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamil-forgiveness-is
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

மனஅழுத்தம்

தனிமையும் அமைதியும்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

இளைப்பாறுதலைக் காணுதல்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்
