மன்னிப்பு என்பது ...மாதிரி

மன்னிப்பு என்பது ...

9 ல் 5 நாள்

உங்கள் கையை திறக்க விரும்புகிறீர்களா? 🫴

மிக ஆழமாகவும் அநியாயமாகவும் என்னை ஒருவர் புண்படுத்திய பிறகு, அவரை மன்னிப்பது எவ்வளவு கடினம் என்பது என் தனிப்பட்ட அனுபவத்தில் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், மன்னிப்பு தரும் சுதந்திரத்தை நான் அனுபவித்திருக்கிறேன், நீங்களும் அதை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்!

“மன்னிப்பு என்பது மனக்கசப்பு எனும் கதவையும் வெறுப்பு எனும் கைவிலங்குகளையும் திறக்கும் திறவுகோல். அது கசப்பு எனும் சங்கிலிகளையும் சுயநலம் எனும் கட்டுகளையும் உடைத்தெறியும் வல்லமை”. – கோரி டென் பூம்

அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:28). சகலமும் என்று சொல்லும்போது, வலி நிறைந்த மற்றும் மன்னிக்க முடியாத காரியங்களும் அதில் அடங்கும். அவரால், சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும் தரமுடியும் (ஏசாயா 61:3-4). மன்னிப்பு ஆண்டவர் நம்மை மாற்றுவதற்கான வல்லமைக்கு வழியை ஆயத்தப்படுத்துகிறது.

கிளாடி ஸ்டெய்ன், எலிசபெத் எலியட் மற்றும் கோரி டென் பூம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு, இந்தப் பெண்களை ஆண்டவர் தமது ராஜ்யத்தில் எப்படிப் பயன்படுத்தினார் என்பதைக் காட்டுகிறது.

கைகளைத் திறந்தால் மட்டுமே புதிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். மன்னிக்க வேண்டாமெனத் தீர்மானித்தால், ‘ஆண்டவரே, நீர் எனக்குத் தர விரும்பும் எல்லா நன்மைகளையும் பெறுவதற்கு என் கைகளைத் திறப்பதை விட, வலியோடு கூட என் கைகளை இறுக்கமாக மூடிக்கொள்ளவே விரும்புகிறேன்’ என்று சொல்கிறோம்.

ஆண்டவரிடமிருந்து நீங்கள் பெறக்கூடிய மிகப்பெரிய பரிசு, அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பதாகும், ஆனால் மற்றவர்களது பாவங்களை மன்னிக்க மறுப்பது என்பது அவரிடமிருந்து நீங்கள் மன்னிப்பைப் பெறுவதைத் தடுக்கிறது. மத்தேயு 6:14-15 இவ்வாறு கூறுகிறது, "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்."

நாம் தொடர்ந்து மன்னிப்பதற்குப் பயிற்சி செய்யும் இந்நாட்களில், இந்த ஜெபத்தை ஏறெடுப்போமாக: 'ஆண்டவரே, இன்று, மன்னிக்க உதவுவீராக, உண்மையாக மன்னிக்க உதவுவீராக. சகலவிதமான மனக்கசப்பையும் பகைமையையும் விடுவிக்கவும், விட்டுவிடவும், சரணடையவும் மற்றும் கைவிடவும் உதவி செய்வீராக. என் இதயம் சுதந்திரமாகவும் இலகுவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போதும் என்னைச் சூழ்ந்திருக்கும் உமது சமாதானத்துக்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!’

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

மன்னிப்பு என்பது ...

மன்னிப்பு என்பது ஒருவருடைய மனதை மற்றும் இருதயத்தை மாற்றும் சக்தி கொண்டது. அது மன்னிக்கும் நபருக்கும், மன்னிக்கப்பட்ட நபருக்கும் மன அமைதி மற்றும் சமாதானத்தை கொண்டுவரும். இந்த பயணம் உங்கள் வாழ்க்கையில் மன்னிப்பின் வல்லமையை உணர்த்தி, இதன் மூலம் மனதின் அமைதியையும், பிறருடன் சமாதானமாய் வாழவும் உதவும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamil-forgiveness-is