இளைப்பாறுதலைக் காணுதல்மாதிரி

இளைப்பாறுதலைக் காணுதல்

7 ல் 1 நாள்

உன் சோர்வுக்கு மருந்து உண்டு.

இன்றுமுதல், "இளைப்பாறுதலைக் காணுதல்" என்ற தொடரை நாம் தியானிக்கத் தொடங்குகிறோம். நீ இயேசுவிடம் வந்தால், இளைப்பாறலாம் என்று அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்தச் செய்திகளின் குறிக்கோள் என்னவென்றால், சரீரப்பிரகாரமாகவோ, மனதளவிலோ, அல்லது உணர்வுப்பூர்வமாகவோ சோர்வாக இருக்கும் வாசகர்களுக்கு உண்மையான இளைப்பாறுதலைக் கண்டறிய உதவுவதாகும்.

இயேசு சொன்ன இந்த வசனம் அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது: "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:28-29)

உன் சோர்வைப் போக்க ஒரு மருந்து உள்ளது, இந்தப் பரிகாரம் ஒருபோதும் சோர்வடையாதவரிடமிருந்து வருகிறது.

மத்தேயு 11ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள், நீ இருக்கிற வண்ணமே என்னிடம் வா என்ற அழைப்பாகும். அவர் ஆண்டவருக்கு அருகில் இளைப்பாற ஒரு அழைப்பை கொடுக்கிறார்.

ஆண்டவரைப் பற்றி வேதாகமம் நமக்கு என்ன சொல்கிறது: “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." (ஏசாயா 40:28-29)

ஆம், அவர் சர்வவல்லமையுள்ளவர், நித்தியமானவர், எல்லையற்றவர், அளவிட முடியாதவர். இன்று உனக்குத் தேவையான அனைத்தையும் நீ அவரில் காணலாம். அவரிடம் தீர்வு இல்லை என்ற கவலை உனக்கு ஒருபோதும் வேண்டாம். உன் சோர்வை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, அதற்கு ஈடாக, அவரது நன்மை, அவரது பொறுமை, அவரது பலம், அவரது படைப்பாற்றல் மற்றும் அவரது வல்லமை ஆகியவற்றை அவரிடமிருந்து எடுத்துக்கொள்.

இன்று, நான் உன்னை ஒரு காரியத்தைச் செய்ய அழைக்கிறேன்: உடல்ரீதியாக, மனரீதியாக அல்லது உணர்ச்சி ரீதியாக உன்னை சோர்வடையச் செய்யும் அனைத்தையும் எழுது. அதன் பிறகு, இச்சோர்வுகளை எதிர்கொள்ள ஆண்டவர் உனக்கு அளிக்கும் அனைத்தையும் எழுது! இன்று, உனது பலத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொள், அவர் உனக்காகத் தயார் செய்துள்ள அபரிவிதமான ஆசீர்வாதங்களை அவர் உனக்குள் ஊற்றட்டும்!

இந்தத் திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

இளைப்பாறுதலைக் காணுதல்

'இளைப்பாறுதலைக் கண்டடைதல்' என்ற இந்த வாசிப்புத் திட்டமானது மத்தேயு 11:28-29-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுள்ளது. நீங்கள் அவரிடத்தில் வரும்போது, இளைப்பாறுதலைக் கண்டடைவீர்கள் என்று இயேசு வாக்குப்பண்ணினார். சரீரத்திலோ, மனதிலோ, அல்லது உங்கள் உணர்விலோ நீங்கள் இளைப்பாறுதல் இன்றி இருப்பீர்களானால், உண்மையான இளைப்பாறுதலைக் கண்டடைய உங்களுக்கு உதவுவதே இந்தச் செய்திகளை உங்களுக்குக் கொண்டுவருவதன் நோக்கமாகும். இந்தத் தொடரை நாம் வாசிக்கத் தொடங்குவோம்!

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=findingrest