இளைப்பாறுதலைக் காணுதல்மாதிரி

இளைப்பாறுதலைக் காணுதல்

7 ல் 4 நாள்

இது உன்னை ஒருபோதும் நசுக்காத நுகம்!

இயேசு தம்முடைய வார்த்தையில் கூறுகிறார்: "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:28-29)

"நுகம்" என்ற வார்த்தையை நீ நினைக்கும்போது, உன் நினைவுக்கு வருவது எது?

அநேகரைப் பொறுத்தவரை, இந்த வார்த்தை, மதம், தொழில், குடும்பம் என எதுவாக இருந்தாலும், அடிமைத்தனம் மற்றும் பாரமான சுமையை சுமத்தல் என்ற எதிர்மறையான அர்த்தமுடையதாக நினைக்கின்றனர்.

வரையறையின்படி, இது பாரமானதும் நம்மை ஒடுக்குவதுமான ஒரு சுமை என்பதை முன்பு நாம் பார்த்தோம்.

ஆனால் இயேசு நமக்கு முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தைத் தருகிறார்: “இயேசு சொன்னார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:28-30)

உண்மையில், இயேசு பேசிக்கொண்டிருந்த நுகம் என்பது இரண்டு எருதுகள் ஒன்றாக இணைந்து உழுவதற்காக இணைக்க பயன்படுத்தப்படும் ஒரு நுகமாகும்.

நீ இயேசுவோடு சேர்ந்து, அவருடன் இணைந்திருப்பதைக் கற்பனை செய்து பார்: அவரே உன்னை சுமந்து செல்கிறார், உன்னை முன்னோக்கி இழுப்பவரும், நீ மென்மேலும் முன்னேற உதவுபவரும் அவரே ஆவார்.

இயேசுவின் நுகம் மீனின் துடுப்பு போன்றது. அவருடைய நுகத்தடியே உன்னை முன்னேறச் செய்கிறது. உலகின் நுகம் உன்னைத் தடுத்து நிறுத்தலாம், ஆனால் இயேசுவின் நுகம் நீ கற்பனை செய்வதை விட அதிகமாக உன்னை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது. இயேசு உன்னோடு இருக்கும்போது, நீ சுமக்க வேண்டியதை உனக்காக அவர் சுமப்பார்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

இளைப்பாறுதலைக் காணுதல்

'இளைப்பாறுதலைக் கண்டடைதல்' என்ற இந்த வாசிப்புத் திட்டமானது மத்தேயு 11:28-29-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுள்ளது. நீங்கள் அவரிடத்தில் வரும்போது, இளைப்பாறுதலைக் கண்டடைவீர்கள் என்று இயேசு வாக்குப்பண்ணினார். சரீரத்திலோ, மனதிலோ, அல்லது உங்கள் உணர்விலோ நீங்கள் இளைப்பாறுதல் இன்றி இருப்பீர்களானால், உண்மையான இளைப்பாறுதலைக் கண்டடைய உங்களுக்கு உதவுவதே இந்தச் செய்திகளை உங்களுக்குக் கொண்டுவருவதன் நோக்கமாகும். இந்தத் தொடரை நாம் வாசிக்கத் தொடங்குவோம்!

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=findingrest