இளைப்பாறுதலைக் காணுதல்மாதிரி

மிகவும் பாரமான சுமை எது என்று உனக்குத் தெரியுமா?
இயேசு தம்முடைய வார்த்தையில் இவ்வாறு கூறுகிறார்: "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:28-29)
நீ உன் பாரத்தை அளவிட முடிந்தால், உன் சுமை எவ்வளவு எடையுள்ளதாக இருக்கும்?
- இந்த நோய் எத்தனை கிலோ இருக்கும்?
- உன் குடும்பத்தில் உள்ள பிரிவின் பாரம் எத்தனை கிலோ இருக்கும்?
- உன்னை அச்சுறுத்தும்படி உன் தோள்களில் அழுத்திக்கொண்டிருக்கும் இந்த நிதி நிலைமை எத்தனை கிலோ இருக்கும்?
இதோ உனக்கு ஒரு நற்செய்தி: உன் கண்களை ஆண்டவரை நோக்கி ஏறெடுக்க இது உன்னை ஊக்குவிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்: “அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோகும்." (ஏசாயா 10:27)
நாம் சுமக்க வேண்டிய அவசியமில்லாத எல்லாவற்றிலிருந்தும் நம்மை விடுவிக்கவே இயேசு வந்தார்: குற்ற உணர்வு, ஒப்பிட்டுப் பார்த்தல், பொறாமை மற்றும் நம் வாழ்வில் சோர்வைக் கொண்டுவரும் இன்னும் பல விஷயங்களிலிருந்து அவர் நம்மை விடுவிப்பார்.
இயேசு நமக்கு நிறைவான வாழ்வளிக்கும்படி வந்தார். நமக்கு அவர் ஒரு சுமுகமான வாழ்வளிப்பதாக உறுதியளிக்கவில்லை, மாறாக அவர் நம்முடன் சேர்ந்து நடக்கும் ஒரு உன்னத வாழ்க்கையை தருவதாக வாக்களித்திருக்கிறார்.
எல்லாவற்றையும் சொல்லி முடித்த பின்னரும், செய்து முடித்த பின்னரும், இயேசு இல்லாமல் வாழ்ந்தால் அது மிகப்பெரிய பாரமான சுமையாக இருக்கும். ஏனென்றால் அவரிலும் அவர் மூலமாகவும் மட்டுமே சமாதானம், மகிழ்ச்சி, விசுவாசம், நம்பிக்கை ஆகியவை கிடைக்கும். அவர் உனக்கு அருகில் இருக்கும்போது, நீ ஒருபோதும் தனியாக இருப்பதில்லை என்பது உறுதி! அவர் உன்னைக் கண்காணிக்கிறார். அவர் உன்னைப் பாதுகாக்கிறார். அவர் உன்னை நேசிக்கிறார்.
இந்த வாக்குத்தத்தத்தை நீ அப்படியே பற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இன்று உனக்காக எனது ஜெபமாகும்: ஆண்டவர் உன்னோடு, ஒவ்வொரு நாளும், உலகத்தின் முடிவு பரியந்தமும் இருக்கிறார். (மத்தேயு 28:20)
நாம் ஒன்றாக இணைந்து ஜெபிப்போம்… “ஆண்டவரே, என் இதயத்தை நீர் அறிவீர், நான் உம்மை எவ்வளவாய் நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும். நீர் இங்கே என்னுடன் இருக்கிறீர் என்பதை நான் அறிவேன், மேலும் நான் உம்மை என் வாழ்வில் அதிகமாக அனுபவிக்க விரும்புகிறேன். என்னை பாரப்படுத்தும் அனைத்தையும் நான் உமது கரத்தில் தருகிறேன், உமக்காக நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ஆம், நான் எதிர்பார்க்கிறேன், ஆண்டவரே! நன்றி. உமது வார்த்தையில் நீர் வாக்குப்பண்ணியிருப்பதால், நீர் என்னை வழிநடத்துகிறீர்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

'இளைப்பாறுதலைக் கண்டடைதல்' என்ற இந்த வாசிப்புத் திட்டமானது மத்தேயு 11:28-29-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுள்ளது. நீங்கள் அவரிடத்தில் வரும்போது, இளைப்பாறுதலைக் கண்டடைவீர்கள் என்று இயேசு வாக்குப்பண்ணினார். சரீரத்திலோ, மனதிலோ, அல்லது உங்கள் உணர்விலோ நீங்கள் இளைப்பாறுதல் இன்றி இருப்பீர்களானால், உண்மையான இளைப்பாறுதலைக் கண்டடைய உங்களுக்கு உதவுவதே இந்தச் செய்திகளை உங்களுக்குக் கொண்டுவருவதன் நோக்கமாகும். இந்தத் தொடரை நாம் வாசிக்கத் தொடங்குவோம்!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=findingrest
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

தனிமையும் அமைதியும்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

மனஅழுத்தம்

மன்னிப்பு என்பது ...

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்
