பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

உங்கள் ஆவியிலே புத்துணர்வுடன் செயல்பட- இன்று தேவன் அக்னியை ஊற்றுகின்றார். புதிய வாழ்க்கை ஒருகாலத்தில் உலர்ந்த, உயிரற்றதாக இருந்த வாழ்க்கை மீண்டும் பற்றி எறியும்; நீங்கள் மீண்டும் கனவு காண்பீர்கள்; நீங்கள் மீண்டும் நம்பிக்கை பெறுவீர்கள்; நீங்கள் மீண்டும் எழும்புவீர்கள். கிறிஸ்துவுக்குள் பூரணமாக செயல்படும் ஒரு கிறிஸ்தவனைக் கண்டு சத்துரு பயப்படுகிறான். செயலற்று இருக்கும் – ஏனோதானோ என்று இருக்கும் - கிறிஸ்தவர் அவனை அச்சுறுத்துவது இல்லை. இதினிமித்தமே சத்துரு உங்கள் கவனத்தை சிதறடித்து, சோர்ந்து போகச் செய்து இவ்வளவு கடினமாக சண்டையிட்டான். ஆனால்,
சமாதானத்துக்கான நினைவுகள்: இப்பொழுது அபிஷேகம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உங்களுக்குள் அதிகரிக்கிறது. உங்களில் சிலர் இதுவரை பார்த்திராத திருப்புமுனையான. பெருவளர்ச்சியான, தடைதகர்ந்த சம்பவங்களை காண்பீர்கள். இது நீங்கள் எதிர்பார்த்திராத சூழ்நிலையில் – மகா-பெரிய அசாத்தியமான சம்பவங்களை சாத்தியமாக்கும், நிரந்தரமாக மூடின கதவுகள் திறக்கும். இந்த உறவை என்னால் சரிசெய்யவே முடியாது என்று நினைத்திருப்பீர்கள் - அந்த உறவு சீர் / சரிசெய்யப்படும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

எரேமியா 29:11 ....அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இன்றைய தேவை - சமாதானத்துக்கான நினைவுகள்; நம்பிக்கை ; சொன்னபடி நிறைவேறும் வாக்குகள் – இவை நமக்கு சர்வலோகத்தை ஆட்சி செய்யும் தேவாதி தேவனின் சர்வவல்ல கரத்தால் மட்டுமே சம்பவமாக்கித் தரமுடியும். ஏன் இந்த வலி, வேதனைகள், நோய்கள், இழப்புகள்....காரணம் : சத்துரு -அவன் எப்படிப்பட்டவன்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான்:10:10) தீர்வும் இந்த 10 ஆம் வசனத்திலேயே இயேசு தருகிறார்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். இயேசு யார்- இன்றைக்கு எனக்கு நன்மை செய்கிறவர்; பிசாசிடம் அகப்பட்ட என்னை குணப்படுத்துகிறவர். அப்போஸ்தலர் 10:38 நமது இன்றைய சமாதானத்துக்கேதுவான நினைவுகள்: பலவருடங்களாக நமக்கு பாரமாக இருந்த பாரம் திடீரென எடுபட்டு போகும்;இருதயத்தின் ஒரு மூலையில் நாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த விருப்பத்திற்கு பதில் –நாம் கற்பனை செய்தும் பார்த்திராத விதத்தில் கிடைக்கும்
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d