அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

5 ல் 2 நாள்

பரிசுத்த ஆவியானவர் (நமது ஆலோசன கர்த்தா/ தேற்றரவாளரின்) நிரப்புதலைப் பெற்றிருக்கும் ஒரு மனுஷனுடைய அல்லது மனுஷியின் வாழ்க்கை “மறுரூபம்” (TRANSFORM) ஆகியிருக்கும். இதன் அர்த்தம் : அவர்களை பயம் இனியும் கட்டி வைக்க முடியாது; பாவத்திற்கு இனியும் அவ்ர்கள் அடிமை இல்லை. வழிதெரியாமல் அவர்கள் வாழ்க்கை செல்வதில்லை. மாறாக, அவர்கள் வல்லமை, அன்பு மற்றும் தேவபிரசன்னத்தினால் நிரப்பப்பட்டிருப்பார்கள்.

அதிகமாக சத்தமிடுபவர், நீளமாக துதி ஏறெடுப்பவர்கள் தான் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருப்பவர் என சிலர் நினைக்கிறார்கள். அப்படி இல்லை. பரிசுத்த வேதாகமம் - தூய ஆவியானவரின் பிரசன்னம் உடையவர்களை அவர்கள் எப்படிப்பட்ட பழக்கத்தினை (Habits -What they do as routine) கொண்டிருக்கின்றார்கள் என்பதினால் அறியலாம் - என்று கற்றுத்தருகின்றது. ஜெபிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தூயஆவியானவருக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்கள் என்றும் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் இருதயதுடிப்பே ஜெபம் என்பதையும் - நாம் அவர்களை பார்க்கும்போதே அறிந்து கொள்ளலாம்.

அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் தரும் வாக்கு தான் இன்றைய தியான வார்த்தைகள் – நான் உனக்கு போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

தேவ ஆவியானவரால் போதிக்கப்பட்டு, அவரது ஆலோசனையைப் பெற்று அவரால் வழிநடத்தப்படும் வாழ்க்கைக்கு ஆதாரம் அதி-காலை ஜெபம்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
 

சம்பந்தப்பட்ட திட்டங்கள்