அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

5 ல் 3 நாள்

ஜெபம் என்பது ஒரு சடங்கு [RITUAL] அல்ல; அல்லது கடமை இல்லை. அது ஓர் உறவின் அடிப்படை(Foundation of a RELATIONSHIP); தேவ ஆவியானவரின் நிரப்புதலைப் பெற்றவர்கள் கடனே என்று ஜெபிக்கச் செல்வதில்லை. மாறாக, என் பரமபிதா உடன் தொடர்பில் இருப்பேன் என்று அவர்களுக்குள் இருக்கும் தீராத வாஞ்சையால் ஜெபிக்கிறார்கள்.

அவர்கள் அப்பாவுடன் பேசுவதற்கு- ”சமயம் வாய்த்தால்” பேசுவது என்பது அவர்களைத் திருப்திபடுத்தாது. அவருடன் நேரம் செலவழிக்க வேண்டும் அவருடைய சத்தத்தை நான் கேட்க வேண்டும். அவருடைய உறவு எனக்கு முக்கியம் என்பவர்களுக்கு ஜெபம் – மூச்சுவிடுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமானதாக இருக்கும்.

நமது ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளும் ஒரு வழி- ஜெபம் என்பதை மட்டுமல்ல தேவனுடன் நாம் நெருக்கமாக உறவில் இருக்க ஜெபம் அவசியம் என்பதையும் அதிகாலையில் ஜெபிப்பவர்கள்- அறிந்து வைத்திருப்பார்கள்.

”எங்கள் பிதாவே” [மத்தேயு 6:9ல்] என்று அழைத்து ஜெபிக்க நமது ஆண்டவர் ஏன் கற்றுதந்தார் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்,

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
 

சம்பந்தப்பட்ட திட்டங்கள்