குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
‘குணமாக்குகிறார்’ என்பதற்கு எபிரெய மொழியில் ராஃபா (Rapha/Ropheca) என்று வருகிறது. ராஃபா என்றால், “பரிகாரம், சுகம், சரி செய்தல், பழுது பார்த்தல் மற்றும் ஆரோக்கியத்தை மீட்டுத்தருதல்” என்று அர்த்தம். ராஃபா என்கிற வினைச்சொல் சரீர சுகத்துடன் சம்பந்தப்படுத்தி கூறப்பட்டுள்ளது.
தெய்வீக சுகத்தைக் குறித்து வேத போதனையை நிறைய பேர் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று மறுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அந்த வசனத்தைப் பார்க்கும்போது, அது சரீர வியாதியைக் குறித்தும், அதற்கான தெய்வீக பரிகாரத்தைக் குறித்தும் தான் பேசுகிறது என்பது தெளிவாக விளங்குகிறது.
‘ராஃபா’ என்கிற வார்த்தை முதன்முறையாக ஆதியாகமம் 20:17ல் காணப்படுகிறது. அந்த வசனம் சந்தேகத்துக்கிடமின்றி ‘சரீர சுகத்தைப்’ பற்றிதான் கூறுகிறது என்பதை அதை மேலோட்டமாக படித்தாலே புரிந்து கொள்ளலாம். லேவியராகமம் 13:18; 14:3 ஆகிய வசனங்களில் கூட ராஃபா என்கிற வார்த்தை காணப்படுகிறது. அங்கும் சரீர சுகத்தைத்தான் அது குறிக்கிறது. மேலும், “மக்ஹாலே” (Makhaleh) எனும் எபிரெய வார்த்தையும் சரீர வியாதியைக் குறிக்கும் வார்த்தையாகவே எங்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சரி, வியாதிகளைக் குறித்து தேவன் சொன்னதை சற்று கவனிப்போம். யாத்திராகம புத்தகம், மோசேயின் பிறப்பு முதல், இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையண்டை வந்து சேர்ந்த வரை உள்ள 80 வருட சரித்திரத்தைக் கூறினாலும், இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட ஆயத்தமான இரண்டு வருட கால சம்பவங்கள்தான் இதில் முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. இஸ்ரவேல் மக்கள் வாழ்க்கையில் சம்பவித்த காரியங்களுக்கும் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் மிகப்பெரிய தொடர்பு இருப்பதால், யாத்திராகமம் புத்தகம் ஆவிக்குரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புத்தகமாயிருக்கிறது. இஸ்ரவேல் மக்களின் வெற்றிகளிலும் தோல்விகளிலும் ஆவிக்குரிய ஜீவியத்தின் கோட்பாடுகள் பல செயல்படுவதை நாம் பார்க்கலாம்.
மோசேக்கு 80 வயதானபோது (யாத்திராகமம் 7:7), இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் தேவனுடைய வேளை வந்தது. தேவன், ஆபிரகாமுடன் தான் செய்து கொண்ட உடன்படிக்கையை (யாத்திராகமம் 2:24) நினைவுகூர்ந்து, பார்வோனிடத்தில் பேசுவதற்கு எகிப்துக்கு போக மோசேயை அழைத்தார்.
மோசே அந்த தலைமைப் பொறுப்பை ஏற்க மிகவும் தயங்கி பல சாக்குபோக்குகளை சொன்னபோது (யாத்திராகமம் 3:11, 13; 4:1, 10, 13), இஸ்ரவேலை மீட்க தேவன் அவனை வல்லமையாய் பயன்படுத்தினார். இஸ்ரவேலை அனுப்பிவிட பார்வோன் விரும்பாததால், தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றும்படி தொடர்ச்சியாய் பல வாதைகளை தேவன் எகிப்தின் மீது அனுப்பினார்.
இஸ்ரவேலை போகவிடும்படி மோசே பார்வோனிடம் சொன்னபோது, பார்வோன் ஆணவத்தில் தேவனுக்கே சவால்விட துணிந்தான் (யாத்திராகமம் 5:2). எகிப்தின் மீது வந்த பத்து வாதைகளும், செங்கடல் சம்பவமும் பார்வோனுடைய சவாலுக்கு பதிலாய் அமைந்தது. இவற்றின் மூலமாக ‘யார் கர்த்தர்’ என்பதை பார்வோன் அறிந்து கொண்டான். மேலும் இந்த அற்புத செயல்கள் இஸ்ரவேல் மக்களுக்கும் ஒரு படிப்பினையாக இருந்தது (யாத்திராகமம் 8:22).
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.