குணமாக்கும் கிறிஸ்துமாதிரி

குணமாக்கும் கிறிஸ்து

25 ல் 11 நாள்

இந்த 10 வாதைகளை கவனமாய் வாசித்து, யாருக்கு விரோதமாய் இந்த வாதைகள் வந்தது என்று பார்த்தால், ஜீவனுள்ள தேவன் விக்கிரக வழிபாட்டை ஏன் வெறுக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். அவர் அன்று அதை வெறுத்தார், இன்றும் அதை வெறுக்கிறார். அவ்வாறு வழிபடுகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அவருடைய வார்த்தை கூறுகிறது (ரோமர் 1:18-32).

குறிப்பு : எந்த விதத்தில் பார்த்தாலும், நோய்களுக்கும் வியாதிகளுக்கும் காரணம் தேவன் அல்ல, பிசாசு தான். நீங்கள் யாராயிருந்தாலும் சரி, ஜீவனுள்ள தேவனை, அவர் விரும்பும் விதத்தில் நீங்கள் வழிபட தவறும்போது, வியாதியும் நோயும் உங்களைத் தாக்க நீங்களே வாசலை திறந்து வைத்துவிடுகிறீர்கள். தேவன் ஆரோக்கியத்தின் தேவன். அவரை உண்மையாய், தாழ்மையோடு நாடிவரும் ஒவ்வொருவரையும் அவர் குணமாக்க விரும்புகிறார்.

எசேக்கியேல் 47:8, 9, 12 மற்றும் வெளிப்படுத்தல் 22:2 ஆகிய வசனங்களில் சுகம் முக்கியமான இடத்தில் பெறுகிறது என்பதை கவனிக்க வேண்டும். திருச்சபையில் எழுப்புதல் ஏற்படும்போது, அந்த எழுப்புதல் துடிப்புமிக்கதாய் எல்லா விதத்திலும் பிரயோஜனமுள்ளதாய் காணப்படவேண்டுமானால், நிச்சயம் அதில் சுகமும் ஒரு முக்கியமான அம்சமாய் இருக்கவேண்டும். ஆகவே தான் இந்த முக்கியமான காரியத்தைக் குறித்து இப்படிப்பட்ட முக்கியமான ஒரு காலகட்டத்தில் எழுதுகிறேன்.

தேவனுடைய குணமாக்கும் நதிகள், சுகம் தேவைப்படுகிற மக்கள் பக்கமாய் இதற்கு முன்னிராத வகையில் வல்லமை பாய்ந்தோடப் போகிறது என்பது இந்த ஆண்டிற்குரிய தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் என்று நான் உறுதியாய் நம்புகிறேன். தேவனுடைய வார்த்தையை அவமதிக்கிறவர்கள் அழிக்கப்படுவார்கள். தெய்வீக சுகத்தைக் குறித்து போதுமான அறிவு இல்லாமை அநேகருடைய அழிவுக்கு காரணமாகும். ஆனால், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் அதிகாரத்தினாலும் நிறைந்திருக்கும் உண்மையுள்ள திருச்சபை, தெய்வீக மருத்துவராம் இயேசுவின் சுகமளிக்கும் வல்லமையை வியாதிப்பட்டிருக்கும் மக்களிடம் கொண்டு செல்லும் வாய்க்காலாய் இருக்கும். எனவே, இந்த போதனையை சமயம் கிடைக்கும் போதெல்லாம் திரும்பத் திரும்ப படியுங்கள். இந்த வருடம் கர்த்தர் தம்முடைய சுகமளிக்கும் வல்லமையை உங்களுக்குள்ளும் உங்கள் மூலமாகவும், அவருடைய மகிமைக்காக வெளிப்படுத்துவதற்கு உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.      

வேதவசனங்கள்

நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

குணமாக்கும் கிறிஸ்து

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.  

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.