குணமாக்கும் கிறிஸ்துமாதிரி

குணமாக்கும் கிறிஸ்து

25 ல் 25 நாள்

நீங்கள் இந்த ஜெபத்தை விசுவாசத்துடன் வாயைத் திறந்து சொல்லும்போது, பொல்லாங்கன் உங்களை விட்டும் உங்கள் குடும்பத்தை விட்டும் வெளியேறுவதையும், தேவனால் உண்டாகிற மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவதையும் கண்கூடாக காண ஆயத்தமாகுங்கள். அதுமட்டுமல்ல, தேவனுடைய வல்லமை உங்கள் வாழ்க்கையில் பிரவேசித்து, உங்களையும் உங்களுக்கு சொந்தமான அனைத்தயும் அதனுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதையும் நீங்கள் காண்பீர்கள்.

“பிதாவே, நீர் ஒருவரே என் தேவன். உம்மையன்றி வேறு தேவன் இல்லையென்று இயேசுவின் நாமத்தில் கூறுகிறேன். நீர் நீதியுள்ள தேவன், என்னுடைய இரட்சகர், என்னை குணமாக்குகிறவர். நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நான் நீங்கலாகும்படி சிலுவையில் கிறிஸ்து எனக்காக சாபமானார் என்று கலாத்தியர் 3:13 சொல்வதை முழுமையாக விசிவாசித்து, மீண்டுமாக என்னை உமக்கு முற்றிலுமாக அர்ப்பணிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய வேதம் ஏன் மனமகிழ்ச்சியாய் இருக்கிறபடியால், உம்முடைய வார்த்தை என்னை நடத்துகிறபடி நான் இப்போது செய்ய விரும்புகிறேன்.  

பிதாவே, இயேசுவின் நாமத்தில் நான் பிசாசை எதிர்த்து நிற்கிறேன். அவனால் வரும் நெருக்கடிகளை, தாக்குதல்களை, வஞ்சனைகளை, பரம்பரை சாபங்களை நான் எதிர்த்து நிற்கிறேன். என் முற்பிதாக்கள், அறியாமையினாலேயோ, ஆணவத்தினாலேயோ, எப்படி பாவஞ் செய்திருந்தாலும், நான் என்னை உம்முடைய பலத்த கைக்குள் தாழ்த்துகிறேன். இந்த சாபங்களை சாத்தான் என்னுடைய வாழ்க்கையில் கொண்டுவர காரணமாயிருந்த அவர்களுடைய தப்பிதங்களுக்காக நான் மனந்திரும்புகிறேன்.

இயேசுவின் நாமத்திலே, பரிசுத்த ஆவியின் வல்லமையிலே, இயேசுவின் இரத்தத்தின் அதிகாரத்திலே, எனக்கும் என் குடும்பத்திற்கும் எதிராக எழும்புகிற பிசாசையும், அவனுடைய சகல மந்திர தந்திரங்களையும் நான் எதிர்த்து நிற்கிறேன்.

பொல்லாத சாபங்களை, மந்திரங்களை, சூனியங்களை, கட்டுகளை, அசுத்த சக்திகளை, அசுத்த ஆவிகளின் உதவியுடன் என்னைக் குறித்தும் எனக்கு அருமையானவர்களைக் குறித்தும் அறிய விரும்பும் அசுத்தமான அறிவை, என்னையா அல்லது என்னுடைய குடும்பத்தையோ அல்லது என்னுடைய ஊழியத்தையோ அழிக்கும்படியாக அனுப்பப்படும் பில்லி சூனியங்களை இயேசுவின் இரத்தத்தில் உள்ள வல்லமையினால் நான் எதிர்த்து நிற்கிறேன். எல்லா அசுத்த சக்திகளும் அவைகள் புறப்பட்டு வந்த இடத்திற்கே திரும்ப செல்லட்டும் என்று கட்டளையிடுகிறேன்.

இயேசுவின் இரத்தத்தால் பிசாசின் பிடியிலிருந்து நான் மீட்கப்பட்டிருக்கிறேன். இயேசுவின் இரத்தத்தால் என் பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டிருக்கிறது. எனவே நான் பிசாசுக்கு கீழ்ப்படிய மாட்டேன், கீழ்ப்பட்டிருக்க மாட்டேன். இயேசுவின் இரத்தத்தால் நான் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன், பாவமே செய்யாதவனைப் போலிருக்கிறேன். இயேசுவின் இரத்தத்தினாலே எந்தவித பயமோ, தாழ்வு மனப்பான்மையோ, ஆக்கினைத் தீர்ப்பின் உணர்வோ இல்லாமல் தேவனுடைய பிரசன்னத்தில் பிரவேசிப்பதற்கு எனக்கு தைரியமுண்டாயிருக்கிறது.

குறிப்பாக, பெலவீனம், மலட்டுத்தன்மை, நோய் தொற்றுதல், வலி, தூக்கமின்மை, கெட்ட சொப்பனங்கள், சரீரத்தில் உண்டாகும் எரிச்சல், புண்கள், தேவையற்ற வளர்ச்சிகள் அல்லது கட்டிகள், ஒவ்வாமை, நோய் கொடுக்கும் கிருமிகள், கர்ப்பம் விழுதல், பயம், புத்தி சுவாதீனம் இல்லாமை, ஒழுங்கின்மை, கலககுணமுள்ள பிள்ளைகள், மனபாரம் மற்றும் மனச்சோர்வின் ஆவி மற்றும் ......................................................... (கோடிட்ட இடத்தில் உங்களை பாதித்துள்ள ஏதாவது வியாதியின் பெயரை அல்லது அசுத்த ஆவிகள், பில்லி சூனியன்களால் உங்களுக்கு ஏற்படும் பிரிச்சனைகளை போட்டுக் கொள்ளுங்கள்) ஆகியவற்றை என்னுடைய வாயின் வார்த்தையைக் கொண்டும், தேவனுடைய விசுவாசத்தைக் கொண்டும் நான் எதிர்த்து நின்று, நிராகரித்து, விரட்டியடிக்கிறேன்.

பிசாசே, என்னுடைய விசுவாசமென்னும் கேடகத்தை உனக்கெதிராக நான் உயர்த்தி பிடிக்கிறேன். நீ பொய்யான தெய்வம், குற்றஞ்சாட்டுகிறவன், சர்வ வல்லவருடைய பிள்ளைகளை ஒடுக்கிறவன் என்று உன்னை குறித்து தீர்ப்பு சொல்லியிருக்கிற பரிசுத்த ஆவியின் பட்டயமாகிய தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நான் உன்னை எதிர்த்து நிற்கிறேன். என் வாழ்க்கையில் இருந்த உன்னுடைய கிரியைகள் அழிக்கப்பட்டுவிட்டது. நீ கொடுத்துவந்த ஆலோசனைகள், அசுத்தமான சிந்தனைகள், அசுத்தமான சொப்பனங்கள், என் காதுகளில் விழும்படி நீ பேசிவந்த உன்னுடைய குரலின் சத்தம் எல்லாம் உடனடியாக இயேசுவின் நாமத்தில் நிற்கட்டும் என்று கட்டளையிடுகிறேன். என்னுடைய மனதிலும், ஆவிக்குரிய கண்களிலும், ஆவிக்குரிய காதுகளிலும் இயேசுவின் இரத்தத்தை நான் மீண்டும் பூசிக்கொள்ளுகிறேன்.

இறுதியாக, கர்த்தாவே, இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலமாக நீர் என்னை சாபத்திலிருந்து மீட்டெடுத்து, சகலவிதத்திலும் நீர் ஆசீர்வதித்து வந்த ஆபிரகாமின் ஆசீர்வாதங்களாகிய மேன்மை, ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், பொருளாதார செழிப்பு, எதிரிகள் மீது முற்றும் ஜெயம், தேவனுடைய தோழமை மற்றும் தேவனுடைய தயவு ஆகிய ஆசீர்வாதங்களுக்குள் என்னை கொண்டு வந்திருக்கிறபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், விசுவாசிக்கிறேன், அறிக்கை செய்கிறேன், பெற்றுக்கொள்ளுகிறேன். ஆமென், ஆமென்”.

வேதவசனங்கள்

நாள் 24

இந்த திட்டத்தைப் பற்றி

குணமாக்கும் கிறிஸ்து

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.  

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.