குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
முற்பிதாக்களின் சாபத்திலிருந்து முற்றிலும் விடுதலையானதற்கு தற்கால உதாரணம் சுவிசேஷகர் நிக்கி குரூஸ் (Nicky Cruz). இவர் டீன் சேலஞ் (Teen Challenge) என்ற ஊழியத்தை ஸ்தாபித்தார். இவருடைய பெற்றோர் மாந்தரீகம் செய்து பிழைத்தவர்கள். குறிப்பாக, அவருடைய தாய் ஒரு சூனியக்காரி. பேய் விரட்டப்பட, சுகம் பெற, குறிகேட்க இவர்களிடம் பியூர்டோ ரிக்கோ (Puerto Rico) தேசத்தில் நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்திலிருந்து மக்கள் வருவார்கள். நிக்கியுடன் பிறந்தவர்கள் மொத்தம் 18 பேர். இவர் வளரும் பருவத்திலே ஆவி உலகத்தை குறித்து பல காரியங்களை அறிந்து வைத்திருந்தார். அதுமட்டுமல்ல, பெற்றோருக்குப் பிறகு இந்த தொழிலை அவர்தான் செய்யவேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். இவருடைய வாழ்க்கை சரிதை ‘The Cross and the Switchblade’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்து, பிற்பாடு திரைப்படமாக எடுக்கப்பட்டது. நிக்கியும், ‘Devil on the Run’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில், அவர் வளர்ந்த விதத்தைக் குறித்தும், அவர் எவ்வாறு இரட்சிக்கப்பட்டார் என்பதைக் குறித்தும் விவரமாக நிக்கி எழுதியிருக்கிறார். இது இலட்சக்கணக்கில் விற்பனையானது. நிக்கி தான் அவருடைய குடும்பத்தில் கருப்பு ஆடு. வாலிப வயதில் நியூயார்க் நகரில் ரௌடி கும்பலின் தலைவனாக இருந்த நிக்கிதான் குடும்பத்தில் முதல் ஆளாக இரட்சிக்கப்பட்டவர். அவருடைய நீண்ட கால ஊழியத்தில், சாத்தானுடைய வல்லமையின் வெளிப்பாட்டை அவர் பலமுறை கண்டு, ஒவ்வொரு முறையும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக அந்த வல்லமையை அவர் தோற்கடித்தார். எல்லா விதமான மாந்திரீக சாபங்களையும் சிலுவையின் வல்லமையால் மேற்கொள்ள முடியும் என்பதற்கு நிக்கியின் வாழ்க்கை ஒரு அற்புதமான சாட்சியாகும். அல்லேலூயா!
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் இருக்கிற பரம்பரை சாபத்தை முறிப்பதற்கு வேத வசனங்களையும், வேதத்தின் அடிப்படையில் ஒரு ஜெபத்தையும் உங்களுக்கு உதவும்படியாக நான் கொடுக்கப் போகிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.