குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
இந்த இயேசுதான் இன்றைக்கு உங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எனவே தேவனை சுத்தமாக துதித்து நன்றி சொல்லுங்கள். தேவனுடைய மனதில், சாத்தானும் அவன் செய்த கலகமும் இன்னமும் பசுமையாக இருக்கிறது; ஆனால் உங்கள் பாவங்களையோ அவர் மன்னித்து, நிரந்தரமாய் மறந்துவிட்டிருக்கிறார். இயேசுவுக்குள்ளாக, இயேசுவின் மூலமாக கிரியை செய்த அதே வல்லமை இன்றைக்கு உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள் தேவனுடைய நீதியாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒருவேளை பூரணராக இல்லையென்றாலும், இயேசுவின் இரத்தத்தால் நீங்கள் கழுவி சுத்திகரிக்கப்பட்டு, இயேசுவின் இரத்தத்தால் மூடப்பட்டிருக்கிறீர்கள். அநாதி தேவனுடைய மனதில் உங்களுடைய கடந்த கால பாவங்களின் நினைவு கடுகளவும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆர்ப்பரித்து மகிழுங்குள். உங்களுடைய அழுகையின் நாட்களும், துயரத்தின் நாட்களும் முடிந்துவிட்டது. நீங்கள் சாகாமல் பிழைத்திருந்து உங்களுடைய பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கர்த்தர் எவ்வளவு உண்மையுள்ளவர் என்பதை சொல்லுவீர்கள். இயேசுவின் இரத்தத்தைக் குறித்த பாடல்களைப் பாடுங்கள். பாவம், வியாதி, கட்டுகள், பிசாசு ஆகியவற்றின் மீது இயேசுவின் இரத்தத்திற்கு உள்ள வல்லமையை அறிக்கை செய்யுங்கள். இயேசுவின் இரத்தத்திற்கு உள்ள வல்லமையைக் குறித்து பேசாமல், வாய்மூடி இருக்கமாட்டேன் என்று தீர்மானியுங்கள். ஏசாயா 53ம் அதிகாரத்தை சத்தமாக வாசித்து, ‘வார்த்தை சிகிச்சை’ (Word Therapy) எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தேவன் எல்லையற்ற விதத்தில் உங்களுக்கு எல்லாவற்றையும் செய்ய விரும்பும்போது, நீங்கள் ஏன் கட்டுண்டவர்களாய் வாழவேண்டும்? இந்த வார்த்தைகளை வாசிக்கும் இந்த வேளையில், உங்களுக்குள் கிரியை செய்துக்கொண்டிருக்கும் தேவனுடைய பரிசுத்தமான வல்லமையை அங்கீகரித்து, அதற்கு இணங்கி, தேவனுடைய மகிமைக்காக அதை பயன்படுத்துங்கள்.
உங்களை குறித்து நீங்கள் இப்போது பேசுகின்ற வீணான வார்த்தைகளை நிறுத்திவிட்டு கிறிஸ்துவுடன் உங்களை அடையாளம் காணுங்கள்: “நான் மீட்கப்பட்டவன். நான் தேவனுடைய பிள்ளை. நான் தேவனுடைய நீதியாயிருக்கிறேன். இயேசுவின் இரத்தத்தின் நிமித்தம் ஏன் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படிருப்பது மட்டுமல்ல, இனி ஒருபோதும் தேவன் அவைகளை நினைவுகூரப்போவதும் இல்லை. கிறிஸ்து எனக்குள் இருக்கிறார், நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். தேவன் என்னை அவருடைய குடும்பத்திற்குள் சுவிகாரம் எடுத்து, ஏற்றுக்கொண்டிருக்கிறார். நான் விசுவாசக்குடும்பத்தை சேர்ந்தவன். உலகத்திலிருக்கிறவனைக் காட்டிலும் எனக்குள் இருக்கிறவர் பெரியவர். கிறிஸ்துவின் மூலமாக நான் முற்றும் ஜெயம் கொள்ளுகிறவன். என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் நான் எல்லாவற்றையும் செய்வேன். நான் இனி தனிமையாக இல்லை. நான் இனி பெலவீனன் அல்ல. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறபடியால் இனி ஒருபோதும் நான் தனிமையாக இருக்கப்போவதில்லை”, என்று இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.