குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
ஆகவே, உங்களுக்கு பிறந்த பிள்ளைகள் அல்லது உங்களுடைய தத்துப் பிள்ளைகளின் வாழ்வில் காணப்படும் அநேக பிரச்சனைகளுக்கு பரம்பரை சாபம் காரணமாயிருக்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். இப்படிச் சொல்வதால், பரம்பரை சாபத்தை போக்க வேறு வழியே இல்லை என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது. அதை அகற்ற தேவன் ஒரு வழியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். வேதம் கூறும் அந்த வழியை ஏற்றுக்கொண்டு பரம்பரை சாபத்திலிருந்து வெளியே வருவது உங்கள் கையில்தான் இருக்கிறது.
பாதுகாப்பற்ற உணர்வு, பயம், சுயமரியாதை குறைவு, தரித்திரம், மீளமுடியாத கடன் பிரச்சனை, மிகுந்த கோபம், தோல்வி மனப்பான்மை, தற்கொலை எண்ணம், பிற்போக்காய் பேசுதல், வன்முறை, பாலியல் பாவம், மன அழுத்தத்தால் சரீரத்தில் ஏற்படும் வியாதிகள், சண்டை, புறங்கூறுதல், அவதூறு செய்தல், கசப்பு, ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட மாதத்திலோ அல்லது நாட்களிலோ வரும் வியாதி, உக்கிரம், மலட்டுத்தன்மை, விநோதமான காரணத்தால் உண்டாகும் அகால மரணம், மனச்சோர்வு, ஜெபிக்க முடியாதபடி தடுக்கும் தூக்க மயக்கத்தின் ஆவி, இருமனம், உடல்பருமன், தொப்பை, யோகா, பெருந்தீனி, விக்கிரகாராதனை, முரட்டாட்டம் பண்ணும் பிள்ளைகள், கெட்ட கனவுகள், சோம்பல், அசுத்தம், தவறான நடக்கை, மிருகங்களை வதைப்பது, புகையலை மற்றும் மதுவை சார்ந்திருப்பது, வேலையில் நிலைத்திருக்க முடியாமல் போவது, பிசாசைக்குறித்த காரியங்களை அறிய வேண்டும் என்கிற ஆசை, தவறான படங்கள், பில்லி சூனியம், இச்சை, மகா மட்டமனா புத்தி, வானசாஸ்திரம் மற்றும் ஜோதிடம் மூலம் எதிர்காலத்தைக் குறித்து அறிய வேண்டும் என்கிற ஆசை போன்றவை ஒருவருக்கு இருக்குமானால், அதற்கு காரணம் அவருடைய முன்னோர்கள். முன்னோர்களில் யாராவது இப்படி வாழ்ந்து, மனந்திரும்பாமல் மரித்திருப்பார்கள். ஆகவே அந்த காரியங்கள் இப்போது பிள்ளைகளிடம் காணப்படுகிறது. அருமையானவர்களே, இப்படிப்பட்ட காரியங்களை பிசாசு என் வாழ்க்கையிலும் வீட்டிலும் கொண்டுவர முடியாது என்று நீங்கள் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்த போதனைக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. சிலர் பரம்பரை சாபத்தை அறிக்கை செய்வார்கள், ஆனால் அதைக் குறித்து ஒன்றும் செய்ய மாட்டார்கள். மற்றவர்கள் மீது பழிபோடுவதற்கு பரம்பரை சாபத்தை அறிக்கை செய்தல் அவர்களுக்கு வசதியாயிருக்கிறது. அதன்மூலம் அவர்கள் தங்களுடைய பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்கள் “கொள்ளுத் தாத்தாவுக்கு இருந்தது, தாத்தாவுக்கு இருந்தது, அப்பாவுக்கு இருந்தது” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அநேகர் ஒவ்வொரு நாளும் தரித்திரத்தை அறிக்கை செய்து, தரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அநேகர் ஒவ்வொரு நாளும் பயத்தையும் தாழ்ச்சியையும் அறிக்கை செய்து, பயத்திலும் தாழ்ச்சியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். “தேவனுடைய வாக்குத்தத்தங்களேல்லாம் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. எனவே தேவன் சொன்னபடி அப்படியே நடக்கும்” என்று சொல்வதற்கு பதிலாக அநேகர், “எனக்கு பயமாயிருக்கிறது”, “நான் பயந்துபோய் விட்டேன்” என்று பயத்தையே ஒவ்வொரு நாளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் விசுவாசித்து, அதையே பேசியே, அதையே தங்கள் மனதில் வைத்து, அதினால் தங்களுடைய வாழ்க்கையை நிரப்புகிறபடியால், இந்த சுழற்சியிலிருந்து விடுபெற முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.