குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
எனவே, ஏதோமியர் தேவனுடைய காரியங்களை வெறுத்தது மட்டுமல்ல, எப்போதும் யாக்கோபின் சந்த்தியாரோடே சண்டை பண்ணுகிறவர்களாகவும் இருந்தார்கள். ஏசாவும் யாக்கோபும் அண்ணன் தம்பிகளாய் இருந்தாலும், அவர்களுடைய சந்ததியார் – ஏதோமியர் தேவனை வேறுக்கிரவர்களாயும், இஸ்ரவேலர் தேவனை அன்பு கூறுகிறவர்களாகவும் – இருந்தார்கள்.
மாமன்னன் ஏரோது, பாதி இதுமேயன் பாதி யூதன். தேவனை வெறுக்கிரவர்களா அல்லது தேவனை அன்பு கூருகிரவர்களா என அவனுக்குள்ளேயே ஒரு போராட்டம். ஆனால் தேவன் அவனோடு இடைபட்டார். தேவன் எப்போதும் பரம்பரை சாபத்தை போக்க விரும்புகிறார்; அதுதான் அவருடைய சித்தம். ஆகவே, பாவத்தையும், அந்த பாவம் ஏரோதின் மீதும் அவனுடைய சந்ததியின் மீதும் கொண்டிருந்த வல்லமையும் அழிக்கும்படியாக தேவன் வார்த்தையையும், சாட்சியையும் அனுப்பினார். மத்தேயு 2ம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களில் இதைத்தான் நாம் வாசிக்கிறோம். கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள், அவர்களை வழிநடத்தி வந்த நட்சத்திரம், ஆலோசகர்களின் ஆலோசனை போன்ற எதுவுமே, எரோதுவுக்கு இரட்சகர் தேவை என்பதையோ, அல்லது இருளடைந்த இருதயம் மற்றும் பாவம் நிறைந்த வாழ்க்கையில், உலகத்தின் ஒளி வெளிச்சத்தை பிரகாசிக்க செய்ய வேண்டும் என்பதின் அவசியத்தையோ, உணர்த்த முடியவில்லை. பரம்பரை சாபம் முரிக்கப்படுவதற்கான வாய்ப்பு கிடைத்தும், அவன் அதை நிராகரித்து விட்டான்.
தலைமுறை தலைமுறையாய் பரம்பரை சாபத்தியும் பாவத்தையும் சுமந்து கொண்டிருந்தவன், அவற்றிலிருந்து விடுதலையாக வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டான். இது போதாதென்று, இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலை செய்து மிகப்பரிய கொடூரமான பாவத்தையும் அவன் செய்தான்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.