குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
பரம்பரை சாபங்கள் கண்டுபிடிப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், ஒரு முக்கியமான வழியை நான் உங்களுக்கு சொல்லுகிறேன். உங்களுடைய முன்னோர்களுக்கு இருந்த பிற்போக்கான பிரச்சனைகள், பல தலைமுறைகள் கடந்தும் உங்கள் வாழ்க்கையில் இன்னமும் தொடர்ந்து இருக்குமென்றால் (அந்த பிரச்சனைகள் குறிப்பாக உங்கள் குடும்பத்தில் மட்டும் இருக்குமென்றால்), அதுதான் பரம்பரை சாபம். அதற்கு உடனடியாக பரிகாரம் செய்யாவிட்டால், அது உங்களுடைய பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என உங்களுடைய பின் சந்ததியையும் பாதிக்கும். உலகம் அதை குடும்ப மரபு (Genes) என்று அழைக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் அதை “பரம்பரை சாபம்” என்று அழைக்கிறோம்.
ஏறக்குறைய ஒவ்வொரு மனுஷனுடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தாலும், இதற்கான தீர்வை கண்டுபிடிக்க முடியாமல் உலகம் குழம்பிப்போய் இருக்கிறது. இப்படியொரு பிரச்சனை இருக்கிறதை உலகம் அங்கிகரிக்கிறபடியால்தான், மருத்துவ காப்பீட்டு படிவத்தில், “உங்கள் பரம்பரையில் யாருக்காவது இருதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், மனநோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருந்ததா அல்லது ஏதாவது விபத்துகள் திரும்பத்திரும்ப நடைபெற்று வருகிறதா?” என்று பல கேள்விகளை கேட்கிறார்கள். இக்கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு உங்களுக்கு சலிப்பாக இருந்தாலும் கேள்விகளைக் கேட்கும் காப்பீட்டு நிறுவனங்கள் சலிப்படைவதில்லை. ஒவ்வொரு கேள்விக்கும் உண்மையான பதிலை சொல்லுங்கள் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தவறான தகவல் அளித்தால், உங்களுக்கு அபராதம் கூட விதிக்கப்படலாம்.
அவர்கள் ஏன் உங்கள் குடும்பத்தைக் குறித்து குறிப்பாக இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறார்கள்? கூடநம்பிகையினால் அப்படிக் கேட்பதில்லை; உங்களுடைய பரம்பரையில் பிரிச்சனை இருந்தால் அது உங்களுக்கும் வரலாம் என்று அவர்கள் நம்புகிறபடியால் அப்படிக் கேட்கிறார்கள்.
ஒரு நாணயத்தின் இருப்பக்கமாய் இருக்கிற இரண்டு வசனங்களை நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். “...உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து... பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்” (யாத்திராகமம் 20:5). “…உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்...” (உபாகமம் 7:9).
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.