குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட விரும்புகிறீர்களா? உங்கள் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட விரும்புகிறீர்களா? உங்கள் பிள்ளைகளை விட வேறு எதுவும் உங்களுக்கு பெரியதாக தெரிவதில்லை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவனுக்கு இடம் கொடுக்கும்போது, அவருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொளும்படியாக நீங்கள் வாசலை திறந்து கொடுக்கிறீர்கள். 430 வருட அடிமைத்தனத்திற்கு பிறகு இஸ்ரவேல் மக்களுடைய வாழ்க்கையில் நடந்தது இதுதான். “... அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. ஆனால் நீங்கள் பிசாசுக்கு இடங்கொடுத்தால் அல்லது “பரம்பரை சாபத்தின்” கீழ் இருந்தால், உங்கள் பிள்ளைகளும் உங்களோடு கூட சாபத்தின் கீழ் வர வழி செய்கிறீர்கள். பிறகு பிசாசு தன்னுடைய சகல தந்திரங்களோடும் அவர்களிடத்தில் வந்து அவர்களை விழுங்கி விடுவான்! எகிப்திலே இறுதி தீர்ப்பாகிய பத்தாவது வாதை உண்டானபோது இந்த காரியம்தான் சம்பவித்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியானது மட்டுமல்ல, எகிப்து தேசம் முழுவதுமே சோகமாகவும் கல்லறையாகவும் மாறிப்போனது. முக்கியமாக, இது ஏழை பணக்காரர் என அனைத்து தரப்பு மக்களையும் பாதித்தது.
தேவன் தம்முடைய அந்த ஞானத்தினால், ஆசிர்வாதத்தைக் குறித்தும் சாபத்தைக் குறித்தும் சாலொமோன் மூலமாய் பேச தெரிந்து கொண்டார். இந்த இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து பரிசுத்த ஆவினாவர் சாலொமோன் இராஜாவுக்கு போதித்த காரியங்களை கவனமாக வாசியுங்கள். நமக்கு அது மிகவும் பிரயோஜனமாக இருக்கும். ஏனென்றால் நாமும் அதைக் குறித்துத்தான் படித்துக்கொண்டிருக்கிறோம். “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதிமொழிகள் 10:22). கர்த்தருடைய ஆசீர்வாதம் ஒரு மனுஷனுடைய வாழ்க்கையிலோ அல்லது குடும்பத்திலோ அல்லது ஒரு தேசத்திலோ வரும்போது, அதனோடு வேதனை வருவதில்லை. மாறாக கர்த்தருடைய ஆசீர்வாதம் அந்த மனுஷனையோ அல்லது குடும்பத்தையோ அல்லது தேசத்தையோ சரீரம், பொருளாதாரம், உணர்ச்சிகள், பணம், ஆன்மீக வாழ்க்கை உட்பட எல்லாவிதத்திலும் ஐசுவரியமடைய செய்கிறது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.