இவைகளில் அன்பே பிரதானம்மாதிரி

இவைகளில் அன்பே பிரதானம்

26 ல் 8 நாள்

W.E. Vine என்னும் மிகப்பெரிய கிரேக்க மற்றும் எபிரெய மொழி வல்லுனர், “கிறிஸ்தவத்தின் அடையாளமாக இருக்கும் பிரதானமான வார்த்தை அகாபே” என்று கூறுகிறார். கிறிஸ்துவுக்குள் இருக்கும் எந்தவொரு மனுஷனுடைய அஸ்திபாரக் கல்லும் அதுதான். தேவனுடைய உதவி இல்லாவிட்டால் மற்ற மூன்று அன்புகளும் இருக்க வேண்டிய விதத்தில் இருக்க முடியாமல் போய்விடும். தேவ அன்பு நமக்குள் ஊற்றப்படும்போது மட்டுமே மற்ற அன்புகள் ஒரு உறுதியான அஸ்திபாரத்தை பெற முடியும்.

பலருக்கு அன்பு என்பது ஒரு ‘பொய்த் தோற்றமாக’ தெரிகிறது. இந்தியாவில் அதை ‘மாயை’ என்று கூறுகிறார்கள். ஆனால் வேதம் மாயைகளையும் பொய்த் தோற்றங்களையும் பற்றி கூறாமல், மெய்யான காரியங்களைப் பற்றிக் கூறுகிறது. அன்பின் உண்மையான அர்த்தத்தைக் குறித்த நுண்ணறிவை (Insight) வேதம் நமக்கு கூறுகிறது. மனுஷனை, தேவனிடத்திலும், தேவனுடைய சாயலிலும் ரூபத்திலும் உண்டாக்கப்பட்டிருக்கிற சக மனுஷரிடத்திலும் இழுக்கும் தெய்வீக சக்திதான் அன்பு. தேவனை அறிந்தவர்கள் மட்டுமே இந்த அன்பை அறிய முடியும். இந்த அன்பை அறிந்துகொள்ள வேறு வழியே இல்லை.

அன்பு என்பது ஒரு நபராகும். அந்த நபரின் பெயர் இயேசு. தேவன் அன்பாக இருக்கிறார் (1 யோவான் 4:8). இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும், தொழுவத்தில் பிறந்த அவருடைய பிறப்பின் மூலமாகவும் வெளிப்பட்ட தேவனுடைய அன்பை உணராமலும் அனுபவிக்காமலும் கிறிஸ்துமஸை மெய்யான விதத்தில் கொண்டாட முடியாது.

தேவன் அன்பாயிருக்கிறார். நான் இந்த உலகில் வாழ்வதற்கு ஒரே காரணம், அவர் நமக்குள் இருக்க வேண்டும், நாம் அவருடைய அன்பின் வாய்க்கால்களாக இருக்கவேண்டும் என்பதுதான். வேதம் பல நேரங்களில் நம்மை பாத்திரங்கள் என்று அழைக்கிறது. பாத்திரம் என்றால் நடுவில் குழியுடன் இருக்கும். காரணம், அந்தக் குழியில் ஏதாவது வைக்க வேண்டும் என்பதற்குத்தான் தேவன் மனுஷரை தமது பாத்திரங்களாக உண்டாக்கி இருக்கிறார். இந்த மண்பாண்டங்களில் நாம் அவரைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

காலியாய் இருக்கும் பாத்திரம் பயனற்றதாய் இருக்கிறது; அதில் தவறான ஒரு பொருள் இருந்தாலும் பயனற்றதாய் இருக்கிறது. ஆப்பிள்களால் நிறைந்திருக்கும் கூடையை ஆரஞ்சு பழங்களால் நிரப்ப முடியாது. நம்முடைய வாழ்க்கை எனும் பாத்திரத்தில் காணப்படும் கசப்பு, பெருமை, எதிர்ப்பு, கெட்ட நோக்கம், பழிவாங்கும் எண்ணம், கோபம், பகைமை போன்றவற்றை காலிசெய்யாமல் தேவனுடைய அன்பை அதில் கொள்ள முடியாது.

வேதவசனங்கள்

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://christchapel.in/ க்கு செல்லவும்.