இயேசு: நம் ஜெயக்கொடிமாதிரி
பாவத்தின் மீது ஜெயம்
ஆதாமும் ஏவாளும் முதன்முறையாக தேவனுக்குக் கீழ்ப்படியாமல் நன்மை தீமை அறியத்தக்க கனியை ஏதேன் தோட்டத்தில் புசித்தபோது, பாவம் மனித சுபாவத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அப்போதிருந்தே, அந்த பாவத்தால் மனிதர்கள் இயற்கையாகவே கர்த்தரிடமிருந்து பிரிந்தவர்களாக பிறக்கின்றனர். தேவன் பூரணமானவர் ஆதலால், அவர் பாவத்தின் அருகில் இருக்க முடியாது. பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேலர்கள் பாவநிவாரணத்திற்காக பழுதில்லாத ஆட்டுக்குட்டியை அவ்வப்போது பலிசெலுத்த வேண்டியிருந்தது. பாவத்தின் கடன்களை செலுத்த அந்த பலி பழுதற்றதாக இருக்க வேண்டும் - கர்த்தருடன் சரியான நிலையில் நிலைத்திருக்க அந்த ஒரு வழி மட்டுமே இருந்தது.
இயேசுவானவர் "தேவ ஆட்டுக்குட்டி" என்று அநேகமுறை குறிப்பிடப்படுகிறார், ஏனேனில் அவருடைய சிலுவை தியாகம் மனிதர்களின் பாவங்களை மூடியது. சிலுவையின் பல அற்புதஙகளில் ஒன்று ஆதாம் மற்றும் ஏவாளின் பாவ சாபத்தை அது தலைகீழாக மாற்றியது: எவ்வாறு ஒரு பாவச்செயல் மனிதகுலம் முழுவதையும் தேவனிடமிருந்து பிரித்ததோ, அதுபோல ஒரு பழுதில்லாதவரின் தியாகபலி அனைத்து மக்களின் பாவங்களையும் மூடி சமாதானம் பெற வழிவகுத்தது. இயேசு அவரையே நமக்காக தந்ததால், கர்த்தருடன் மீண்டும் உறவாட நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தேவன் நம்மைப் பார்க்கும்போது, அவர் நமது பாவங்களையல்ல - அவர் தமது குமாரனுடைய நீதியைக் காண்கிறார்.
நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகை வாரத்திற்குள்ளாக நுழையும் இந்த தருணத்தில், உங்கள் நேரத்தை இயேசு அவருடைய வாழ்வை நம் பாவங்களை மூட அளித்தபோது நமக்கு கொடுத்த இந்த அற்புதமான பரிசை எண்ணிப்பார்க்க செலவிடுங்கள். அப்போஸ்தலராகிய பவுல் ரோமர் 6:23 ஐ தொடங்கும்போது, "பாவத்தின் சம்பளம் மரணம்" என கூறுகிறார். நாம் நமது நீதியற்ற நிலையில் மரணித்தவர்களாக, கர்த்தரிடமிருந்து நித்தியமாக பிரிந்திருக்க குறிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் பவுல் அந்த வசனத்தை மிக மேன்மையான மீட்பின் சத்தியத்தில் தொடர்கிறார்: "தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." இயேசுவினால், நமது பாவத்தின் கடன் செலுத்தப்பட்டது, மேலும் நாம் கர்த்தரின் சமூகத்தில் நித்திய காலத்தை கழிக்கப்பெற்றிருக்கிறோம்!
அல்லாமலும், இயேசுவானவர் நம்மை அவருடைய நீதியால் மூடியதால், நாம் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுதலையானோம். உங்களுடைய பழைய பாவசுபாவங்கள் உங்களை அடிமைப்படுத்த அனுமதிக்க வேண்டாம். இயேசு பாவத்தின் மீது வெற்றி சிறந்து, அந்த ஜெயத்தை உங்களுடனும் இலவசமாக பகிர்ந்துள்ளார்! நீங்கள் விடுதலையாக இருக்கவே விடுவிக்கப்பட்டீர்கள். அதிலேயே நடந்திடுங்கள்!
இன்றைய படத்தை தரவிறக்க செல்லவும்.
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம்.
More