இயேசு: நம் ஜெயக்கொடிமாதிரி
பயத்தின் மீது ஜெயம்
செய்திகளின் தீவிரத்தாக்கம் மற்றும் முடிவே இல்லாதது போல் தோன்றுகின்ற தவறான தகவல்களால் சூழப்பட்டிருக்கும் இன்றைய உலகத்தில், பயத்தினால் ஆட்கொள்ளப்படுவது எளிதாயிருக்கிறது. தெரியாதவைகளைக் குறித்து நாம் பயப்படுகிறோம், வேதனை மற்றும் இழப்பைக் குறித்து பயப்படுகிறோம், வெற்றிபெறத் தேவையானது நம்மிடம் இல்லை என்று பயப்படுகிறோம். ஆனால் நம்முடைய மாசில்லாத மீட்பர் நம்முடைய பாவங்களுக்காக பலிசெலுத்தித் தீர்க்கும்படி சிலுவையை ஏற்றபோது, பரிபூரண அன்பை அவர் நமக்குக் காட்டினார். பாவம் மற்றும் இவ்வுலக இருளின் எல்லா பக்க விளைவுகளையும் அந்த அன்பின் வல்லமை தோல்வியுறும்படி செய்தது, பயம் உட்பட.
1 யோவான் 4:18 நமக்கு சொல்வது, "பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்". சிலுவையில் தமது அன்பின் உச்சநிலை வெளிப்பாட்டின் மூலம், இயேசு பயத்தின் மேல் வெற்றி சிறந்து, அந்த வெற்றியை பகிர்ந்துகொள்ளும்படியாக நம்மையும் அழைக்கிறார். நமது சிந்தை, இருதயம் மற்றும் ஆவியில் நாம் சமாதானமாய் வாழும்படி அவர் விரும்புகிறார். ஆனால் அவருடைய அன்பின் ஜெயவல்லமையைப் பெற்றுக் கொள்வதும், அதில் நடப்பதும் நம்மைப் பொறுத்ததே. ரோமர் 8:38 இல், பவுல் அப்போஸ்தலன் தேவனுடைய அன்பை விட்டு தம்மை எதுவும் பிரிக்கமாட்டாதென்று தாம் நிச்சயத்திருப்பதாகச் சொல்கிறார். தேவன் நம்மீது வைத்த அன்பில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்கும்படியும் மேலும் அந்த அன்பு அருளும் சமாதானத்தில் உறுதியாயிருக்கும்படியான வாய்ப்பும் நமக்கும் கூட அருளப்பட்டிருக்கிறது. உங்கள் மீதான தேவனுடைய அன்பின் அளவைக் குறித்து கேள்வி கேட்கும்படியான தருணம் உங்களுக்கு எப்போதாவது நேரிடுமானால், நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் சிலுவையை நோக்கிப் பார்ப்பதுவே.
பயம் தாக்கும் போது, நீங்கள்: அது உங்களை மேற்கொள்ள அனுமதிக்கலாம் அல்லது இயேசுவினுடைய அன்பின் வெற்றிச்செயலை நினைவுகூர்ந்து உங்களுக்கு சமாதானம் உண்டாகும்படி அவர் யுத்தத்தை வென்றுவிட்டார் என்று விசுவாசிப்பதைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் சார்பில் எல்லாமே தவறாக நடப்பது போல் தோன்றும்போது, பயத்திற்கு உங்கள் மேல் அதிகாரம் இல்லாதபடிக்கு, சத்தியத்தில் உறுதியாய் நிலைத்திருங்கள். அவருடைய சமாதானத்தைக் கோருங்கள், நீங்கள் அவருடைய அன்பினால் முற்றிலுமாக மூடப்பட்ட நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!
இன்றைய படத்தை பதிவிறக்கம் செய்ய செல்லவும்.
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம்.
More