இயேசு: நம் ஜெயக்கொடிமாதிரி

Jesus: Our Banner of Victory

7 ல் 3 நாள்

அவமானத்தை வென்றுவிடு

எதிரி பேச ஆசைப்படுகிறான். எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் என்று கர்த்தரின் வார்த்தை கூறுகிறது. வெளிப்படுத்துதலில், அவன் நம்மேல் குற்றஞ்சுமத்துகிறவன் என்று குறிப்பிடப்படுகிறான்; அவர் இரவும் பகலும் கர்த்தருக்கு முன்பாக நம்மீது குற்றம் சாட்டுகிறார் என்று நமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான் வஞ்சகமுள்ளவன், நம்முடைய பாவத்தைச் சுற்றி ஒரு வர்ணனையை உருவாக்கி, நம்மை தகுதியற்ற ஒரு மனநிலையில் நிரந்தரமாக வைப்பதே, கர்த்தரால் நமக்கு கொடுக்கப்பட்ட ஆற்றலை கொல்லவும், திருடவும், அழிக்கவும் சிறந்த வழிகளில் ஒன்று என்று அவனுக்குத் தெரியும். நாம் வெட்கத்துடனே வாழ வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.

குற்ற உணர்வு என்பது நான் என்ன செய்தேன் என்பதைப் பற்றியது, ஆனால் அவமானம் என்பது நான் யார் என்பதைப் பற்றியது. நம்மில் பலர் கர்த்தர் நாம் செய்தவற்றை மன்னித்தார் என்பதை ஏற்கிறோம். ஆனால் எதிரி நாம் இயல்பாகவே யார் என்பதை பற்றி பொய்களால் நம்மை மடக்கி குற்றஞ்சாட்ட அனுமதிக்கிறோம். இந்த பொய்கள் நம் வாழ்விற்கான கர்த்தரின் நோக்கத்தைத் தழுவி நடப்பதிலிருந்து நம்மை முடக்குகின்றன. நாம் கர்த்தர் தந்த பரிசுகளை மற்றும் திறமைகளை பயன்படுத்தி உலகில் ஒரு வித்தியாசம் செய்ய அழைக்கப்படுகின்றோம். ஆனால் நாம் அவமானம் மற்றும் அருகதையின்மையிலிருந்து வெளியே வராவிட்டால், நாம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை முழுமையாக சாதிக்க முடியாமல் போய்விடும்.

இயேசு சிலுவையில் நமது பாவத்துக்குப் பதில் தமது நீதியை பரிமாற்றம் செய்த போது, அவர் நம்மை புதுப்பித்தார். இப்போது நாம் யார் என்பதற்கும் நாம் முன்பு இருந்த நிலைக்கும் எந்தவிதமான தாக்கமும் இல்லை. நாம் கர்த்தரின் பிள்ளைகள், முற்றிலும் மன்னிக்கப்பட்டு, கிருபையால் மூடப்பட்டு, அவரது மகிமைக்காக பெரிய வேலை செய்ய அதிகாரம் பெற்றவர்கள். இது மட்டுமே நம் அடையாளமாக தெரிய வேண்டும். அந்த உண்மைக்கு முரணான அவமானத்தின் குரல் வெறுமனே ஒரு பொய்.

இந்த ஈஸ்டர் வாரம் முழுவதும், கர்த்தர் அவருடைய பிள்ளையான உங்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், மேலும் அவருடைய வார்த்தையுடன் ஒத்துப்போகாத எந்தவொரு எண்ணத்தையும் சிறையில் அடையுங்கள். நாம் பரிபூரண வாழ்க்கையைப் பெறவே இயேசு வந்தார். அவமானத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, உங்கள் தெய்வீக நோக்கத்தின் நிறைவேற்றத்தைத் தொடருங்கள்!

இன்றைய படத்தை இங்கே பதிவிறக்கலாம்:   

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Jesus: Our Banner of Victory

நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Church of Highlands க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.churchofthehighlands.com க்கு செல்லவும்