இயேசு: நம் ஜெயக்கொடிமாதிரி

Jesus: Our Banner of Victory

7 ல் 6 நாள்

சோதனையின் மீது ஜெயம்

சோதனை மெய்யானது என்பதை நமக்கு நினைவுபடுத்த எவரும் தேவையில்லை—இதற்குமுன் ஒரு பொத்தான் சொடுக்கில் உலகைப் பற்றிய இவ்வளவு விவரம் அதிவிரைவாக கிடைத்ததில்லை. ஆனால் சாத்தான் நம்மை சோதிக்க முயலும் குறிப்பிட்ட வழிகளைப் பற்றி சற்று நின்று சிந்திக்கிறோமா? நாம் சோதனைக்கு எதிராக தற்காத்துக்கொள்ள, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆதியாகமத்தில், கர்த்தருடைய வார்த்தையையும் அவர் நோக்கங்களையும் வினவி சாத்தான் ஏவாளை சோதித்தான், அதற்கு அவளது கூறிய மறுமொழி பாவத்தையும் சாவையும் உலகிற்குள் கொண்டுவந்தது. 2 சாமுவேலில், "ராஜாக்கள் யுத்தத்திற்கு புறப்படும் காலத்தில்" தாவீது ராஜா தன் வீட்டிலேயே இருப்பதை தெரிந்து கொண்டு, தனது இடத்தில் சண்டையிட பிறரை அனுப்பினார். கர்த்தர் அவனை இருக்க அழைத்த இடத்திலே தாவீது இருந்திருந்தால், உப்பரிகையிலே தனியே இருந்து பத்சேபாளைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதன் விளைவாக, துரோகமும் கொலையும் தாவீதின் கதையில் அறிமுகமானது. மேலும் மத்தேயு 4 இன் படி, ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்கு கொண்டுபோனபோது, சாத்தான் தேவகுமாரனாகிய அவரையே வேதத்தை மேற்கோள் காட்டி சோதிக்க முயன்றான்.

தேவனுடைய வார்த்தையையும், திட்டங்களையும், நமக்கான அவரது இதயத்தின் நினைவுகளையும் நம்மை கேள்விகேட்க வைக்க சத்துரு தொடர்ந்து முயன்றுவருகிறான். சாத்தான் இந்த பேச்சுவார்த்தையில் நம்மை வஞ்சிக்க நேர்ந்தால், அது நம் வாழ்க்கைக்குள் குழப்பத்தையும் வேதனையையும் புகுத்தும் ஒரு வழுக்குகிற சாய்வாக ஆகிவிடும். ஆனால் தேவனை கேள்விகேட்கச் செய்ய வைக்கும் சோதனையை அனுபவிப்பது எப்படியிருக்கும் என்பது இயேசுவுக்கு தெரியும் – உள்ளபடி, நாம் அனுபவிக்கும் எல்லா வகையான சோதனைகளின் வழியாகவும் அவர் சென்றுள்ளார் - மேலும் அவற்றை நிராகரித்துவிட்டு விடுதலையில் நடக்க நமக்கு ஒரு வழியையும் உருவாக்கியுள்ளார். இயேசுவானவர் நம் பாவக்கடன்களை சிலுவையின் மேல் செலுத்தியபோது, மனிதகுலத்தின் மீதான சத்துருவின் வல்லமையை உடைத்தெறிந்தார். அவருடைய தியாகத்தால், நாம் இனியும் சாத்தானுடைய அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவர்களில்லை!

முக்கியமாக, சோதனையின் மீதான இயேசுவின் வெற்றியில் நடக்க, நம் சார்பில் ஆழமான உள்ளக்கருத்து தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சத்துரு அவனுடைய பழைய ஆட்சிப்பகுதியை நம் வாழ்வில் மீண்டும் பெற நினைப்பான் என்பதை தினமும் கருத்தில் கொண்டு அதற்கெதிராக ஜாக்கிரதையாய், இயேசுவில் நம் விடுதலை வாழ்க்கையை தற்காத்துக்கொள்ள காப்பரண்களை உருவாக்கி, சோதனையின் போது கர்த்தரின் உதவியை கேட்பதும், நம்மை பொறுப்பேற்கும் ஆவிக்குரிய நண்பர்களை நம்மைச்சுற்றி ஏற்படுத்திக் கொள்வதும் தேவை. எபேசியர் 6 இல் அப்போஸ்தலனாகிய பவுல் நாம் பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாகும்படிக்கு தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ள வேண்டுமென்று கூறுகிறார்.

இந்த ஈஸ்டர் வாரத்தை நாம் தொடர்கையில், நம் வாழ்க்கைமீதான சத்துருவின் வல்லமையை இயேசுவானவர் ஒழித்தார் என்று உங்களை நீங்களே நினைவுபடுத்துங்கள். எபேசியர் 6:10-18 இன் வழியாக ஜெபித்து அவருடைய சர்வாயுதவர்க்கத்தை தினமும் உடுத்துங்கள். சோதனையின் மேல் விடுதலையுடன் வாழ உங்களுக்குப் பெலனளித்ததற்காக தேவனுக்கு நன்றிசெலுத்துங்கள், மேலும் அதிக ஜாக்கிரதை தேவைப்படும் பகுதிகள் ஏதாகிலும் உண்டா என அவரிடம் கேளுங்கள். நீங்கள் எங்கு பலவீனமாய் இருக்கிறீர்கள் என்பதை அறியவும், சத்துருவை எதிர்த்து நிற்கவும் அவர் உங்களை பலப்படுத்துவார். இயேசுவின் வெற்றியினிமித்தம், நீங்கள் சத்துருவால் மேற்கொள்ளப்படுவதில்லை!

இன்றைய படத்தை தரவிறக்கக்கு செல்லவும்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Jesus: Our Banner of Victory

நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Church of Highlands க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.churchofthehighlands.com க்கு செல்லவும்