பயத்தை மேற்கொள்ளுதல்மாதிரி

பயத்தை மேற்கொள்ளுதல்

5 ல் 2 நாள்

பயத்தை மேற்கொள்ளுதல் - நீங்கள் யார் என்று அறிந்துகொள்ளுங்கள்

தேவன் நம்மைப் பார்த்து சொல்லுகிறது என்னவென்றால்: “பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னை பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” நான் ஏன் பயப்படுகிறேன்? ஏனெனில், எனக்கு அநேக விஷயங்கள் தெரியாததின் நிமித்தமே. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப்பற்றி எனக்கு தெரியாது. மேலும், என்னைக் குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அல்லது என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியாது. ஆனால் ...

ஜனங்கள் உங்களைக் குறித்து சொல்லுகின்ற அல்லது நினைக்கின்ற காரியங்களை வைத்து, நீங்கள் யார் என்பதை தீர்மானித்துவிட முடியாது.

உதாரத்தினமாக, உங்களிடத்தில் ஒரு நூறு ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அந்த நூறு ரூபாயை நசுக்கி, கசக்கி போடுவதினால், அதனுடைய மதிப்பு குறையப்போவதில்லை. உண்மைதானே? இன்னமும் அந்த ரூபாய்க்குரிய பண மதிப்பை அது இழப்பதில்லை. அதேபோன்றே உண்மை நம்முடைய வாழ்க்கைக்கும் பொருந்தும்.

நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, ஜனங்கள் நம்மை கீழே தள்ளலாம், நம்மைப் பற்றி வேறுவிதமாக பேசலாம், நாம் பிரயோஜமற்றவர்களென்று நாமே உணரும்படி செய்யலாம். ஆனால் தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளாக பார்க்கிறார். அவருடைய பார்வையில் நீங்கள் விசேஷித்த திறமையுள்ளவர்களாக காணப்படுகிறீர்கள். அவருடைய பார்வையில் நீங்கள் திறமையுள்ளவர்கள் மற்றும் நல்லவர்கள்.

நான் என் வாழ்வில், பலவிதமான கவலைகளோடும், சந்தேகங்களோடும், கவலையான சிந்தைகளோடும் போராடுகையில், என்னைத் தேற்றுகிற ஒரே ஆறுதுல் தேவன் என்னை நேசிப்பதாக சொல்லிருப்பதை புரிந்துகொண்டு, என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு என்பதை அறிந்துகொள்வதேயாகும்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

பயத்தை மேற்கொள்ளுதல்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஜெ.பி.டுமினி, பயத்தை எதிர்கொண்டு மேற்கொள்ளுதல் பற்றிய தன் தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுகிறார். நாம் அவருக்கு பயப்படும் பயத்தை உறுதிப்படுத்துவதற்காக, நம்முடைய உண்மையான மதிப்பையும் தகுதியையும் புரிந்துகொண்டு, சர்வ வல்லமை பொருந்திய சிருஷ்டிகராகிய தேவனை நோக்கிப் பார்ப்பதின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

More

இந்த திட்டத்தை வழங்கிய JP Duminy க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://jp21foundation.org/