உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்மாதிரி
தேவனை சார்ந்திருத்தல்
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். - கலாத்தியர் 5:16
நாம் ஒவ்வொரு முறையும் விரக்தியை உணரும்போது, நாம் தேவனை சார்ந்து இருப்பதை விட்டு விடுகிறோம் என்று நான் நம்புகிறேன். அது உங்களுக்கு ஒரு தைரியமான கூற்றாக காணப்படலாம். ஆனால் அதைப் பற்றி எண்ணிப்பாருங்கள். நம் பாதையில் என்ன நேர்ந்தாலும் நாம் அதை கடந்து செல்ல தேவன் தமது கிருபையையும், பரிசுத்த ஆவியையும் கொடுத்திருக்கிறார்.
நாம் தேவனை சார்ந்து இருப்பதை நிறுத்திவிட்டு, நாமாகவே காரியங்களை நடத்த முயற்சிக்கும் போது தான் விரக்தி ஏற்படுகின்றது. இதை விளங்கிக் கொண்டது எனக்கு உண்மையிலேயே உதவியாய் இருந்தது. ஒவ்வொரு முறையும் நான் விரக்தி அடைந்த போது, உண்மையிலேயே என்ன செய்து கொண்டிருந்தேன் என்றால் பரிசுத்த ஆவியானவரின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தேன் என்று நினைவுபடுத்திக் கொள்வேன். நான் சிறிய பரிசுத்த ஆவியாக இருக்க முயன்று கொண்டிருந்தேன்!
ஒரு தன்னிச்சையான ஆவியால் போராடிக்கொண்டு இருக்கிறீர்களா? தேவனை சார்ந்து இருக்க நீங்கள் மறுக்கும்போது நீங்கள் சொல்வது என்னவென்றால், சரி ஆண்டவரே, நீர் இருக்கின்றீர் அதை பாராட்டுகின்றேன். இப்போது நான் செய்வதை பாரும் என்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் தேவனை சார்ந்து இருப்பது என்பது கடினமானதாக இருக்கலாம். ஆனால் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நமக்குத் தேவைப்படும் வெற்றிக்கு அதுவே திறவுகோல்.
தேவன் நம்மை இரட்சித்தபோது, அவர் நமக்கு உதவி விட்டு பின்னர் ‘சரி அவ்வளவுதான்’ நீயே உன்னை பார்த்துக் கொள் என்று சொல்லவில்லை. அவர் நித்தியத்திற்கும் நம்மை மன்னித்து இருக்கிறார். அப்படி என்றால் நாம் அவரை சார்ந்து இருப்போம் என்றால் அவர் நம்மை நடத்துவார், நமக்கு உதவுவார்.
நாம் ஆவியிலே நடக்க வேண்டும், வாழ வேண்டும் (வழக்கமான முறையிலே). அப்போது மாம்ச இச்சைகளை நிறைவேற்ற மாட்டோம் என்று கலாத்தியர் 5:16 நம்மை ஊக்கப்படுத்துகிறது.
அது மாம்சத்தை ‘தன்னிச்சையாக மேற்கொள்ளுங்கள்’ அப்போது மாம்ச இச்சைகளை நிறைவேற்றாது இருப்பீர்கள் என்று சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். இல்லை அது பரிசுத்த ஆவியிலே வாழவேண்டும் என்று கூறுகிறது.
தன்னிச்சையாக வாழ்வதை நிறுத்திவிட தெரிந்துகொள்ளுங்கள். மாறாக பரிசுத்த ஆவியை சார்ந்திருங்கள். நீங்கள் அதற்காக வருத்தப்பட மாட்டீர்கள் என்று உங்களுக்கு வாக்கு பண்ணுகிறேன்.
ஜெபம்
எனக்கு தேவையான அனைத்தும் நீரே. நான் என்னையே நம்பாமல் உம் மீது என் நம்பிக்கையை வைத்து, உம்மை சார்ந்திருக்க எனக்கு உதவுவீராக.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிய உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/