உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்மாதிரி

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

14 ல் 11 நாள்

‘இல்லை’ என்று சொல்ல இயலும்போது

இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது.  – எண்ணாகமம் 11:14

எண்ணாகமம் 11-ம் அதிகாரத்தில், நாம் அழுத்தத்திற்குள் இருக்கும்போது என்ன செய்யலாம் என்பதற்கு மோசே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றார். அழுத்தத்தை பற்றி பேசுவோம் என்றால் - பதினோரு நாட்களுக்குள் இருந்திருக்க வேண்டியதற்கு மாறாக 40 ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டது இஸ்ரவேல் மக்களின் வனாந்திர பிரயாணம்!

மக்கள் எல்லாரும் சோர்வுற்றவர்களாக தங்கள் சூழ்நிலையை பற்றி அழுது கொண்டிருந்தனர். 14 -ம் வசனத்தில் மோசே தேவனிடம் “இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது” என்றார்.

மோசேயைப் போன்று நாமும் “இவ்வளவுதான், முடியாது” என்று சொல்வதில் தவறு எதுவுமில்லை. வேதம் ‘என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு’ என்று சொல்கிறது (பிலிப்பியர் 4:13). ஆனால் அது நாம் பல்வேறு விதமான சோதனைகளையும், சூழ்நிலைகளையும் சந்திக்கும்போது, அதை கடந்து செல்ல தேவன் நமக்கு உதவுவதை குறிக்கின்றது.

இது, நாம் அநேக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு முழுவதுமாக களைப்படைந்து போவதை குறிக்கவில்லை. உதாரணமாக ஐந்து பிள்ளைகளை வளர்த்துக் கொண்டு, முழுநேர வேலையும் செய்து கொண்டு, ஆலயத்திலும் பொறுப்பில் இருப்பது போன்றது.

சில சமயங்களில், மிகவும் அதிகமாக இருக்கிறது…. என்று ஒப்புக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி அனுபவிக்க வேண்டும் என்று தேவன் நினைக்கிறாரோ அப்படியாக அனுபவிக்க சில காரியங்களுக்கு ‘இல்லை’ என்று சொல்வதில் தவறு எதுவுமில்லை.

இங்கே உங்களுக்காக ஒரு செய்தி: நீங்களும் நானும் பிறரை போன்றோ, மற்றவர்கள் செய்ய வேண்டியது போன்றோ செய்ய வேண்டிய அவசியமில்லை. அதிகமாக வேலை செய்யும்படி தேவன் சிலரை சிருஷ்டித்து இருக்கிறார். ஆனால் அநேகர் அப்படியாக உருவாக்கப்படவில்லை.

நம்மில் ஒவ்வொருவரும் தேவன் நாம் யாராக இருக்க வேண்டும் என்று சிருஷ்டித்து இருக்கிறாரோ அப்படியாக இருக்க வேண்டும். அதற்காக நாம் வருத்தப்பட வேண்டியதில்லை. நாம் அதிக வேலைப் பளுவினாலும், அழுத்தத்தினாலும் நம்மை வருத்திக் கொள்ளாதபடி நம் வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்கும்படி நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதமாக தேவன் வைத்திருக்கும் பொறுப்புகளில் சமநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய எல்லையை நீங்கள் அடையும் போது, மோசே செய்தது போன்று தேவனிடம் செல்லுங்கள். அவரே ஒரு தெளிவான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நீங்கள் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவுவார்.

ஜெபம்

தேவனே, சில சமயங்களில் நான் என் வேகத்தை குறைத்துக்கொண்டு அதிகமான பொறுப்புகளுக்கு ‘இல்லை’ என்று சொல்ல கடினமாக உணர்கிறேன். நான் உம்முடைய சமாதானத்துடன் வாழ்ந்து என் வாழ்க்கையை அனுபவிக்கும்படி, நீர் எனக்காக சிருஷ்டித்திருக்கும் பொறுப்புகளை சமநிலைப்படுத்தி வாழ எனக்கு உதவுவீராக.

நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிய உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/