உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்மாதிரி

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

14 ல் 12 நாள்

அயராமலிருக்க விடுதலை

இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்… - பிலி 3:10

அயராமல் தேவனை தொடருதல் சுலபமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் நிச்சயமாகவே அது பலன் அளிக்கக்கூடியது. ஆனாலும் உண்மையான விடுதலையை நீங்கள் முதலாவது உணராவிட்டால் தேவனை உண்மையாக தொடரமுடியாது.

தேவன் நம்மை விடுதலையாக்கும் பணியில் இருக்கிறார். குற்ற உணர்வில் இருந்தும், ஆக்கினை தீர்ப்பினின்றும், மக்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று எப்போதுமே நினைத்துக் கொண்டிருப்பதில் இருந்தும் விடுதலை ஆக்கப்பட்டு இருப்பது மகிமையான ஒன்றாகும்.

கிறிஸ்துவுக்குள் நாம் யாராக இருக்கின்றோம் என்பதை அறிந்திருக்கும் போது, நாம் தோற்று விடுவோம் என்ற கவலையிலிருந்து விடுவிக்கப் படுகின்றோம். இது நாம் முன்சென்று தேவனுடைய வாக்குத்தத்தங்களை தொடர தைரியத்தைக் கொடுக்கிறது.

தேவன் எனக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரிய சுதந்திரங்களில் ஒன்று, நான் நானாக இருக்கும் சுதந்திரம் ஆகும். பல வருடங்களாக நான் யாராக இல்லையோ அப்படியாக இருக்கவும், இப்படியாக, அப்படியாக இருக்கவும் நான் மற்றவர்களைப் போல் இல்லை என்று அறிந்தும், அப்படி முயன்று கொண்டிருந்தேன். தேவனுடனான என் உறவின் மூலம் நான் யாராக இருக்க தேவன் என்னை சிருஷ்டித்திருக்கிறார் என்று கற்றுக் கொள்ளும் வரை, பிறரைப் போன்று இருக்க முயன்று கொண்டிருந்தேன். அது நான் இயேசுவை நோக்கி பார்ப்பதற்கும், எப்படி பிறருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அப்படியாக செய்ய, என்னை என்னிலிருந்து விடுவித்தது.

பிலிப்பியர் 3 சொல்வதாவது. பவுல், கிறிஸ்து இயேசு எதற்காக மரித்தாரோ அதைப் பெற்றுக் கொள்ளவும், அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையும் அறிந்து கொள்ளவும் தீர்மானமாகவும், அயராமலும் இருந்தார். நாம் மறுபிறப்பு அடையும்போது, நமக்குள்ளே தீர்மானத்தின் ஆவி எழும்புகிறது என்று நான் நம்புகிறேன். நாம் அதை பரிசுத்த ஆவியின் வாஞ்சை அல்லது வைராக்கியம் என்கிறோம். அதுதான், கடினமான காலங்களிலும் கூட, நான் தேவன் உடனான ஒரு நெருக்கமான, அன்னியோன்யமான, வாஞ்சையான, ஆழமான தனிப்பட்ட உறவை விட்டு விடமாட்டேன் என்றும், கிறிஸ்து நான் இருக்கவேண்டும் என்று விரும்பும் அனைத்திற்காகவும் இருப்பதை நான் விடமாட்டேன் என்று சொல்ல தேவையான உந்துதலை கொடுக்கின்றது.

விசுவாசத்திலே அயராமல் தரித்திருந்து தேவனுடைய வாக்குத்தத்தத்தை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அவருக்கு சொந்தம், அவர் உங்களுக்கு அயராதிருக்கும் ஒரு ஆவியை கொடுத்திருக்கிறார்!

ஜெபம்

தேவனே, உம்மையும் உம்முடைய வாக்குத்தத்தங்களையும் அயராமல் தொடரும் ஒரு புதிய வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். நான் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று என்னை சிருஷ்டித்தீரோ அப்படியாக இருந்து உண்மையான விடுதலையை அனுபவிக்க நீர் எனக்கு உதவுவீர் என்று உம்மை நம்புகிறேன்.

வேதவசனங்கள்

நாள் 11நாள் 13

இந்த திட்டத்தைப் பற்றி

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிய உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/