உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்மாதிரி

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

14 ல் 13 நாள்

முடிப்பதின் முக்கியம்

பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன். – யோவாண் 17:4

பல வருடங்களுக்கு முன், தேவனுக்கு முன், என்னை அழவைத்த ஒரு வசனத்தை வாசித்தேன். யோவான் 17:4-ல் இயேசு, இவ்வுலகத்தில் நான் செய்ய வேண்டுமென்று எனக்கு கொடுத்த வேலையை முடித்து உமக்கு மகிமையை கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். இது சொல்வதாவது, தேவனை பின்பற்றுவது என்பது. நாம் செய்ய வேண்டுமென்று அவர் நம்மை அழைத்ததை செய்து முடிப்பதாகும்.

அந்த வசனத்தை படித்ததிலிருந்து, தேவன் என்னை என்ன செய்ய அழைத்தாரோ அதை செய்வது மட்டும் அல்லாமல் அவர் என்னை செய்யும்படி அழைத்ததை முடிப்பதும் எனக்கு முக்கியமானதாகி விட்டது.

அனேகர் தேவனுடனான பிரயாணத்தை தொடங்குகின்றனர். ஆனால் அத்தனை பேரும் முடிப்பதில்லை என்று எண்ணுகிறேன்.

அப்போஸ்தலர் பவுல் சொன்னார் “ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” – அப் 20:24

தேவனுடைய அழைப்பை முடிக்கவும், அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கவும் தீர்மானமாக இருக்கிறேன். அதைத்தான் உங்களுக்காகவும் விரும்புகிறேன்…. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் அனுபவிக்கவும், தேவன் உங்களை எதற்காக அழைத்தாரோ அதை முடிக்கவும் விரும்புகிறேன்.

ஆனால் இதில் அதிகமான பகுதி நம்மை சார்ந்ததாகும். எல்லாமே தேவனை சார்ந்து இருப்பதில்லை. அவர் தமது பகுதியை செய்து முடித்துவிட்டு, நமக்கு தேவையான எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குள் நமக்கு கொடுத்திருக்கிறார். கற்றுக்கொள்வதும், வளர்வதும் பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே கிரியை செய்ய அனுமதிப்பதும் நம்மை பொறுத்ததே. தேவன், நீங்கள் செய்யும் படி உங்களை அழைத்ததை பற்றி யோசித்து, ‘தேவன் எனக்கு முன் வைத்திருக்கிறதை நன்றாக செய்து முடிக்க நான் என்ன செய்கிறேன்?’ என்று உங்களை நீங்களே கேள்வி கேட்க நேரம் ஒதுக்குங்கள். 

தேவன் உங்களுக்காக பெரிய திட்டங்களை கொண்டிருக்கிறார். விசுவாசத்தால் அவற்றை பெற்றுக்கொண்டு உங்கள் முழு இருதயத்தோடும் அதைத் தொடர்ந்து செல்லுங்கள். இன்று அதை உறுதியாக முடிக்க நீங்கள் உங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தேவனை கணப்படுத்தும் அர்ப்பணம் இது என்று அறிந்திருக்கிறேன்.

ஜெபம்

தேவனே, இயேசுவைப் போல் நீர் எனக்கு வைத்திருந்த வேலையை நான் செய்து முடித்து விட்டேன் என்று என்னாலும் சொல்ல இயல வேண்டுமென்று விரும்புகிறேன். தேவனே உம்முடைய நோக்கத்திற்காக நான் வாழவேண்டும் என்பதற்காய் ஆவலையும், பெலனையும் கொடுத்து என்னுடைய ஓட்டத்தை சந்தோஷமாக முடிக்க என்னுள்ளே கிரியை செய்துகொண்டு இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்!

நாள் 12நாள் 14

இந்த திட்டத்தைப் பற்றி

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிய உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/