உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்மாதிரி

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

14 ல் 7 நாள்

இயேசுவே நம் முன்மாதிரி

அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். -1 யோவாண் 4:8

அன்பானது நாம் பார்க்கக் கூடிய ஒன்றே. அது நம் வாழ்விலே கிரியை செய்யும் ஆவியின் கனியிலே காணப்படுகின்றது. நம் நடத்தையில், நாம் எப்படி மக்களை நடத்துகிறோம் என்பதிலே காணப்படுகின்றது. அன்புக்கு அநேக முகங்கள் உண்டு அல்லது பல விதங்களில் பார்க்கலாம். உதாரணமாக ஒரு வைர மோதிரத்தை வெளிச்சத்திலேயே காட்டும்போது அது எந்தப் பக்கம் திருப்பப்படுகிறதோ அதை சார்ந்து பலவிதங்களில் அது ஜொலிக்கும். அதுபோலவே அன்பு கூட நாம் அதை எப்படிப் பார்க்கிறோமோ அதை சார்ந்த பல விதங்களில் ஜொலிக்கிறது என்று நான் நம்புகிறேன்.

1 கொரிந்தியர் 13:4-7 அன்பின் பல முகங்களுக்கான எடுத்துக்காட்டுகளை காண்பிக்கின்றது. 

  • அன்பு சகலத்தையும் சகிக்கும். காரியங்களை நீண்டகாலம் பொறுத்துக் கொள்ளக்கூடிய தன்மையை கொண்டிருக்கிறது.
  • அன்புக்குப் பொறாமையில்லை - அதற்கு இல்லாததை அது விரும்புவதில்லை.
  • அன்பு தன்னை புகழாது - அது தனக்கு நேராக கவனத்தை திருப்பிக் கொள்ளாது.
  • அன்பு பெருமை அடையாது
  • அன்பு தன் வழியை வற்புறுத்தாது.
  • அன்பு தீங்கு நினையாது.
  • அன்பு ஒரு போதும் விட்டுவிடாது!

நாம் பிறரை நேசிக்கக் கூடிய சில வழிகள்…

இப்படியாக தேவன் நம்மை நேசிக்கிறார். 1 யோவான் 4:8, தேவன் அன்பாக இருக்கிறார். அவர் நம்மை நேசிக்கிறார், நம்மை இரட்சித்திருக்கிறார் என்று சொல்கிறது. எனவே நாம் இப்போது அவரது அன்பை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

தேவனைப் போல இருக்க, நாம் இயேசுவை பார்க்க வேண்டும். 1 கொரிந்தியர் 13 –ல் விளக்கப்பட்டிருக்கும் அன்பின் பரிபூரணமான பிரதிநிதியாக இருக்கிறவர். அவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அன்பிலே செயல்பட்டார். (மக்கள் அவருக்கு எதிராக வந்த போதும்)

கொலோ 1:12-14 –ல் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுவைப் போன்று நாமும் அன்பை தெரிந்து கொள்வோம். அவருடைய முன்மாதிரியை பின்பற்ற தெரிந்து கொள்வோம். தேவனுக்கு கனத்தையும் மகிமையையும் கொண்டுவரத்தக்கதாக.

ஜெபம்

அன்பு என்றால் என்ன என்பதை நீர் என்னை முதலாவது நேசித்ததின் மூலம் காண்பித்திருக்கிறீர். இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றவும், அன்பின் எல்லா வடிவங்களையும் என் அனுதின வாழ்வில் வாழ்ந்து காட்டவும் எனக்கு உதவுவீராக.

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்

ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிய உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/