உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்மாதிரி
யெகோவா ராஃபா: குணமாக்குகிற கர்த்தர்
ஆதிகாலத்துஎகிப்தில்கிடைத்ததோல்சுருள்கள்அந்தநாட்டின்மருத்துவர்கள்மற்றும்குணமாக்குபவர்கள்கண்டுபிடித்ததும், முயற்சிசெய்துபார்த்ததுமானபலவிதமானமருத்துவசிகிச்சைகளைப்பற்றியும்மந்திரங்களைப்பற்றியும்பதிவுசெய்திருக்கின்றன. ஆகவே, எகிப்தைவிட்டுமோசேயுடன்வெளியேறியஇஸ்ரவேலர்களுக்குஇந்தமருந்துகளையும்சிகிச்சைகளையும்பற்றித்தெரிந்திருக்கவேண்டும். ஏனென்றால் அந்தநாட்டில்அவர்கள் 430 நீண்டஆண்டுகளாக வாழ்ந்திருந்தார்கள் கர்த்தரைப் பற்றிய அவர்களது புரிதல் என்பது அதுவரை கேள்விப்பட்டது தான். ஆகவே அவர்கள் கர்த்தரின் மகத்துவமான ஆற்றலையும் அவரது பிரசன்னத்தையும் இன்னும் அறிய வேண்டியதாக இருந்தது.
யாத்திராகமம் 15 ஆம் அதிகாரத்தின் பின்னணியானது, இஸ்ரவேலர் அனைவருக்கும் முன்பாக விளிம்பில் நின்று கொண்டிருந்த மோசே செங்கடலைப் பிரித்த மாபெரும் அற்புதம் தான். இந்த மாபெரும் நிகழ்வுக்குப் பின்னர், மாராவின் கசப்பான தண்ணீர்களின் அருகே அவர்கள் முறுமுறுத்தது நடந்தது. அவர்களது முறுமுறுப்புக்கும்குறைசொல்லுதலுக்கும் பதிலாக மோசே ஒரு நிபந்தனையுடன் கூடிய வாக்குத்தத்தத்தை வைக்கிறார். மக்கள் கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு, அவரது பிரமாணங்களைக் கைக்கொண்டு அவருக்கு முன்பாக சரியானதைச் செய்தால்,எகிப்தியர்களைப் பாதித்த நோய்களைக் கர்த்தர் அவர்கள் மீது வரச் செய்யமாட்டார். அந்தக் கட்டளையை முடிக்கும்போது “நானே உன்னை சுகமாக்குகிற கர்த்தர்” என்ற உறுதிமொழியைக் கொடுக்கிறார். ஆஹா!
அவர் மட்டுமே அவர்களை சுகமாக்குகிற கர்த்தர், எகிப்தில் அவர்கள் அறிந்திருந்த மருத்துவர்களும் மருந்துகளும் அல்ல என்பதே இங்கே கொடுக்கப்படும் வலியுறுத்தல் ஆகும். அவர்கள் தேர்ந்தெடுத்தால் அவர்களை சுகமாக்குகின்றதும் பாதுகாக்கிறதுமான முறையானது சுற்றியிருக்கும் நாடுகளிடம் இருந்து அவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டும்.
இன்று, இயேசுவை நேசிப்பவர்களாக, அவரது சத்தத்துக்கும் வழிகாட்டுதலுக்கும் கீழ்ப்படிகின்றவர்களாக வாழ்வதை நாம் தேர்ந்தெடுக்க முடியும். இது முற்றிலும் நமது தேர்ந்தெடுப்பு ஆகும். ஆனால் அதற்குக் கிடைக்கும் பலனோ மோசே, யோசுவா ஆகியோரின் காலத்தில் நடந்தவைகளைப் போல செயல்படக் கூடியது ஆகும். நாம் வாழுகின்ற வீழ்ச்சியடைந்த உலகத்தில் நடப்பவைகளை நாம் பார்க்கும்போது நாம் நோய்களே இல்லாமல் இருப்போம் என்று சொல்ல முடியாது. ஆனால் நம் கர்த்தர் நம்மை அவற்றின் ஊடாக நடத்திச் செல்வார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். தேவைப்படுபோது நம்மைத் தூக்கிக் கொள்வார், அடுத்த கரைக்கு பத்திரமாக எடுத்துச் செல்வார்.
பிரபலமான கலாச்சாரம் சுகமாகுதல் பற்றி சொல்பவை உங்கள் வாழ்வை உந்தித் தள்ள அனுமதிக்காதீர்கள். உங்களது முதல் தேர்வானது முழங்காலில் நின்று உங்கள் பரம தந்தையிடம் பேசியபின்னர் அவரது வழிநடத்துதலுக்குக் காத்திருப்பதாக இருக்கட்டும்.
எந்த மருந்தும், சிகிச்சையும் ஆழமான குணமாகுதலைக் கொண்டுவர முடியாது. உலகத்தில் உள்ள எந்த மருத்துவரும் நமது ஆவிக்கும் ஆன்மாவுக்கும் சுகத்தைக் கொடுக்க முடியாது. எந்த சிகிச்சையும்வாழ்க்கைமுறையும் உணவுத் திட்டங்களும், அவை எத்தனை ஆரோக்கியமானவைகளாக இருந்தாலும் நம் வாழ்வுக்கு முழுமைத் தன்மையைக் கொடுக்க முடியாது. உண்மையான, நிலைத்திருக்கும், வாழ்க்கையையே மாற்றியமைக்கும் குணமாக்குதல் இயேசுவிடம் இருந்து மட்டுமே வருகின்றது!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்
More
இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.christinegershom.com/