உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்மாதிரி
அனைவருக்கும் குணம், விதிவிலக்கே இல்லை
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் எழுதின நற்செய்தி நூல்களைநாம் படிக்கும்போது இயேசுவின் குணமாக்கும் அருட்பணியில் ஒரு அமைப்பு இருப்பதைக் காணலாம்.
-அவரிடம் வந்த அனைவரையும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் சுகமாக்கினார்
-அவரது பிரசன்னத்தில் இருந்தவர்களை அவர் சுகமாக்கினார். அவர்கள் படுக்கையில் இருந்தாலும் கூட
-வேறு வழியில்லாமல், பயமோ, பிறர் கேலி செய்வார்கள் என்ற வெட்கமோ இல்லாமல் பொது இடத்தில் தன்னை நோக்கிக் கதறியவர்களை அவர் சுகமாக்கினார்
இன்றும் நாம் அவரிடம் வரலாம் என்பதை இது காட்டுகிறது. நாம் அவரது பிரசன்னத்தில் அமர்ந்து, ஆழமான வேதனையோ, பதட்டமோ இருக்கும்போது அவரை நோக்கி நாம் கதறலாம்.
நாம் பொதுவாக குறிப்பிட்ட நண்பரையோ, மருத்துவ நிபுணரையோ அழைக்கிறோம். கடைசியாகத் தான் இறைவனை அழைக்கிறோம்.
கர்த்தர் நமக்குக் கொடுக்கும் அறிக்கையைவிட இணையத்தளம் கொடுக்கும் நோய் காண் அறிக்கைகளையே நம் வாழ்க்கை அதிகம் சார்ந்திருக்கிறது. பிறரது ஆலோசனையையோ, இணையத்தின் தகவலையோ நாடுவதற்கு முன்பாக, நாம் கர்த்தரின் பிரசன்னத்தில் முதலாவதாகவே முழங்காலில் விழுந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
நமது வேதனைகள் எத்தனை சிக்கலானவைகளாக இருந்தாலும் அவரது அனைத்தையும் அணைத்துக் கொள்ளும் பிரசன்னமானது நம்மை பாதுகாக்கவும், தொடர்ந்து காப்பாறவும் முடியும். அவரது பிரசன்னமே என் வாழ்வின் மாபெரும் ஆசையாக என் வாழ்வில் இருந்தால் எப்படி இருக்கும்?
அவரது தொடுதலை உணரும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் நாம் இயேசுவுடன் இன்னும் நெருக்கமாகிக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்?
சங்கீதக்காரன் பல தடவைகள் ஆபத்தில் எப்படி அவர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டதை எழுதியிருக்கிறார். எல்லாம் இருக்கிறது என்று நாம் அணிந்திருக்கும் முகமூடியைக் கழற்றிவிட்டு, கர்த்தரின் பிரசன்னத்தில் கவுரவத்தை எல்லாம் விட்டுவிட்டு நின்றால் எப்படி இருக்கும்? நமது அழுக்கான கண்ணீரையும் நமது உடைந்த நிலையையும், பரிதாப நிலையையும் அவர் பார்த்துக் கொள்வார்.
பார்வையற்ற பர்திமேயு கூட்டத்தின் சத்தத்துக்கும் மேலாகத் தன் குரலை உயர்த்திக் கத்தினார். இயேசுவின் கவனத்தைப் பெறுவதற்காக, தன்னைத் தடுத்தவர்களைக் கண்டு கொள்ளாமல் கூப்பிட்டார். இன்று நாம் நம் பதட்டத்தில் அவரை நோக்கிக் கதறி சுகத்தைக் கேட்டால் எப்படி இருக்கும்?
நம் போராட்டங்களுக்குள் அவரை அழைக்க வேண்டும் என்று காத்திருக்கிறார். நம்மால் சுமக்க முடியாதவற்றை சுமக்க அவர் ஆயத்தமாக இருக்கிறார். நம்மால் முடியாததை அவர் குணமாக்க காத்திருக்கிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்
More
இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.christinegershom.com/